பக்ரீத் பண்டிகையையொட்டி நடைபெற்ற சிறப்பு தொழுகை - குழந்தைகள், பெண்கள் உள்ளிட்டோரும் சிறப்பு தொழுகையில் பங்கேற்பு

Aug 12 2019 4:51PM
எழுத்தின் அளவு: அ + அ -
இஸ்லாமியர்களின் தியாகத் திருநாளான கருதப்படும் பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமியர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு சிறப்பு தொழுகைகளில் ஈடுபட்டனர்.

பிறருக்காக தம்மை அர்ப்பணித்தல், ஏழை, எளியோருக்கு தர்மம் செய்தல், படைத்த இறைவனுக்கு நன்றி செலுத்துதல் ஆகிய நற்பண்புகளை உணர்த்தும் பக்ரீத் திருநாள், இன்று உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய பெருமக்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

திருச்சி மாவட்டத்தில் பள்ளிவாசல்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் கூட்டுத்தொழுகை நடைபெற்றது. இதனிடையே அண்ணாநகர் திடல் மற்றும் ரோஷன் மஹாலில் பெண்கள் மட்டுமே பங்கேற்ற சிறப்பு ரமலான் தொழுகை நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த இஸ்லாமிய பெண்கள் பங்கேற்று தொழுகை நடத்தி வழிபட்டனர்.

திருச்சி ஈத்கா மைதானம் - சையது முர்துஷா மைதானம் - நத்தர்ஹலி தர்ஹா மற்றும் அனைத்து பள்ளிவாசல்களிலும் பக்‍ரீத்தையொட்டி, சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இந்த தியாகத் திருநாளில் அன்பு, பாசம், பரிவு சகோதரத்துவம் ஓங்கவும், அமைதி, சமாதானம், மனிதநேயம் தழைக்கவும், இல்லாமை இல்லை என்ற நிலை உருவாகவும், தன்னலமற்ற சமுதாயம் உருவாகவும் பிரார்த்தனை மேற்கொண்டனர்.

கரூர் மாவட்டத்தில் பக்ரீத் பெருநாளை முன்னிட்டு, 54 பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. பள்ளப்பட்டியில் உள்ள ஈக்கா மைதானத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு சிறப்பு தொழுகை மேற்கொண்டதுடன், ஒருவருக்கொருவர் ஆரத் தழுவி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

பக்ரீத் பண்டிகையையொட்டி அரியலூர் பள்ளிவாசலில் நடைபெற்ற சிறப்புத்தொழுகையில், ஏழை, எளியவர்களுக்கு குர்பானி மூலம் ஆடு, மாடுகளை பலியிட்டு இறைச்சிகளை வழங்ப்பட்டது. இதேபோன்று ஜெயங்கொண்டம், உடையார்பாளையம் திருமானூர், தா.பழுர் உள்ளிட்ட பகுதிகளிலும் பக்ரீத் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

பெரம்பலூர் மாவட்டத்தில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, 72-க்கும் மேற்பட்ட பள்ளி வாசல்களில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில், 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று, ஒருவருக்‍கொருவர் வாழ்த்து தெரிவித்துக்‍ கொண்டனர்.

கும்பகோணம், பாபநாசம், திருப்பனந்தாள் உள்ளிட்ட பகுதிகளில் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு ஜமாத் பள்ளிவாசல்கள் சார்பில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில், 2 ஆயிரத்துக்‍கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி சுல்தான்பேட்டை பகுதியில் அமைந்துள்ள மைதானத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். இதேபோன்று நெல்லிதோப்பு, கோட்டகுப்பம் உள்ளிட்ட இடங்களில் இஸ்லாமிய ஆண்கள், பெண்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். இதேபோல் கடற்கரை சாலையிலுள்ள காந்தி திடல் முன்பு இஸ்ஸாமிய பெண்கள் மற்றும் ஆண்கள் கலந்து கொண்டு சிறப்பு தொழுகை நடைபெற்றது.

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பெரிய மசூதியில், பக்ரீத் பண்டிகையின் சிறப்பு தொழுகையை, ஆற்காடு இளவரசர் நவாப் முகமது அப்துல் அலி மகன் நவாப்ஜாடா முகமது ஆசிப் அலி தொடங்கி வைத்தார். இதில் இசைமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமிய மக்கள் பங்கேற்று, ஒருவருக்‍கொருவர் வாழ்த்து தெரிவித்துக்‍ கொண்டனர்.

சென்னை எம்.கே.பி நகரில் உள்ள மாநகராட்சி விளையாட்டு திடலில், எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பாக தொழுகைக்‍கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த தொழுகையில் கட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதில் கலந்துகொண்ட அக்கட்சியின் தேசிய துணைத் தலைவர் திரு. தெஹலான் பாகவி, இஸ்லாமிய மக்கள் அனைவருக்கும் பக்‍ரீத் நல்வாழ்த்துக்‍களை தெரிவித்துக்‍கொண்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00