தமிழகத்தின் பல்வேறு கோயில்கள், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு : திரளான பக்தர்கள் பங்கேற்பு

Apr 30 2019 11:11AM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தின் பல்வேறு கோயில்கள் மற்றும் தேவாலயங்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில், திரளான பக்‍தர்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர்.

108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என பக்தர்களால் போற்றப்படுவதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்தில் சித்திரைத் திருவிழாவையொட்டி, ஸ்ரீரங்கம் நம்பெருமாள் கருட சேவை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பின்னர் நான்கு சித்திரை வீதி வழியாக திருவீதி உலா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு நம்பெருமாள் கருட சேவை தரிசனம் செய்தனர்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் பழைமை வாய்ந்த சின்னமாரியம்மன் ஆலயத்தின் சித்திரைத் திருவிழாவையொட்டி, தீமிதி திருவிழா நடைபெற்றது. அலகு காவடி, சக்தி கரகம் ஊர்வலம் நடைபெற்றது. தீக்குண்டத்தில் விரதம் இருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள், தீமிதித்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, மாவிளக்கு தீபமிட்டு அம்மனை வழிபட்டனர்.

வேலூர் அடுத்த பெருமுகை கிராமத்தில் ஸ்ரீ திரெளபதி அம்மன் ஆலயத்தில் மகாபாரத பிரசங்க அக்னி வசந்த விழா சிறப்பாக நடைபெற்றது. சித்திரைத் திருவிழாவையொட்டி, மகாபாரதம் சொற்பொழ்வு நடைபெற்று, கடைசி நாளன்று துரியன் படுகொலை நிழகவு, கட்டை கூத்து நாடகம் முலம் நடைபெற்றது. பக்‍தர்கள் அம்மனுக்கு விரதம் இருந்து தீமிதித்து வழிப்பட்டனர். அக்னி வசந்த் விழவில் பக்த்தர்கள் கலந்து கொண்டனர்.

திண்டுக்கல் மறைமாவட்டம் மேட்டுபட்டி பங்கு புனித வியாகுல அன்னை திருத்தலத்தில் 329-ஆம் ஆண்டு பாஸ்கு திருவிழாவையொட்டி, உயிர்ப்பு பாஸ்கா நடைபெற்றது. இயேசு கிறிஸ்து கல்லரையிலிருந்து உயிர்த்தெழுந்து வரும் காட்சிகள் நடித்து காண்பிக்கப்பட்டன. பின்னர், ரத பவனி நான்கு ரத வீதி வழியாக ஆலயத்தை வந்தடைந்தது. மறை மாவட்ட ஆயர் தாமஸ் பால்டரி நற்கருணை ஆசி வழங்க, உயிர்த ஆண்டவரின் திரு கொடியானது இறக்கப்பட்டு பாஸ்கு திருவிழா நிறைவு பெற்றது. திண்டுக்கல் மற்றும் சுற்றுப் பகுதிகளிலிருந்தும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மலையடிப்பட்டியில் உள்ள தோமையார் மலைத்திருத்தலத்தில் பாஸ்கா பெருவிழாவையொட்டி, பெரிய தேர் பவனி நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில், உயிர்த்த ஏசு மற்றும் தோமையார் சொரூபம் வைக்கப்பட்ட பின்னர், ஆயிரக்கணக்கானோர் தேரை வடம் பிடித்து இழுத்தனர். ஏராளமானோர் ஆடிப்பாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00