திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் பங்குனி தேர்திருவிழா : கொடியேற்றத்துடன் தொடக்கம்

Mar 13 2019 5:33PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் பங்குனி தேர்திருவிழா, கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.

108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்தில், பங்குனிதேர் உற்சவத்தை முன்னிட்டு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு கொடியேற்ற மண்டபத்தில் எழுந்தருளினார். பின்னர் கொடிப்படம் புறப்பட்டுவந்து கும்ப லக்னத்தில் கொடியேற்றும் வைபவம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு நம்பெருமாளை வழிபட்டனர். 11 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில், வரும் 18-ஆம் தேதி நாச்சியார் சேர்த்தி சேவையும், முக்கிய நிகழ்வான பங்குனித் தேரோட்டம் மார்ச் 22-ம் தேதியும் நடைபெறவுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் மரகதவல்லி தாயார் சமேத மதனகோபால சுவாமி திருக்கோவிலில், பங்குனி உத்திர விழா, கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. கொடிமரத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றன. பின்னர் கருட கொடிப்பட்டமானது பல்வேறு பூஜைகளுக்கு பிறகு கொடி யேற்றப்பட்டது. முக்‍கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வருகிற 20-ந் தேதி நடைபெறவுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00