தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் மகாகும்பாபிஷேகம் - சுவாமி வீதியுலா - திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்

Feb 11 2019 5:26PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் கும்பாபிஷேகம், சுவாமி வீதியுலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தெப்பத்திருவிழாவின் 3ம் நாளான நேற்று, நம்பெருமாள் காலை மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு மாம்பழச்சாலை அருகில் உள்ள ராமராவ் மண்டபத்திற்கு வந்தடைந்து அங்கு பொதுஜனசேவை கண்டருளினார். தொடர்ந்து மாலையில் நம்பெருமாள் கற்பகவிருக்ஷ வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவைசாதித்தார். பின்னர் அரையர்கள் பாசுரங்களை பாடிய படி முன்செல்ல, பல்வேறு வீதிகளின் வழியாக வலம்வந்து வாகன மண்டபத்தை வந்தடைந்தார். வழியெங்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நம்பெருமாளை சேவித்துச் சென்றனர்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே திருமங்கலம் கிராமத்தில் பழைமை வாய்ந்த பூலோகநாதர், பூலோகநாயகி தாயார் ஆலயம் அமைந்துள்ளது. கி.பி3ம் நூற்றாண்டுக்கு முந்தைய காலத்தை சார்ந்த இந்த ஆலயத்தில், ஒலி எழுத்துக்கள் எனப்படும் தற்போதைய தமிழ் எழுத்துக்களுக்கு முன்னோடியாக விளங்கிய குறியீடு எழுத்துக்கள் அடங்கிய பல்வேறு கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. இந்த ஆலயத்தின் புனரமைப்பு பணிகள் நிறைவடைந்து, நேற்று மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு, கோபுரகலசங்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள புகழ்பெற்ற அருள்மிகு விருத்தாம்பிகை பாலாம்பிகை உடனுறை அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில் மாசி மக பெருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. சிவாச்சாரியார்கள் கொடிமரத்தில் கொடியை ஏற்றினர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொடியேற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

திருவள்ளூர் மாவட்டம், திருவொற்றியூர் அருள்மிகு வடிவுடை அம்மன் உடனுறை தியாகராஜ சுவாமி திருக்கோயில் மாசி பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக துவங்கியது. கொடியேற்ற விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். வரும் 16-ம் தேதி தேரோட்டமும், 18-ம் தேதி கல்யாண சுந்தரர் திருக்கல்யாண உற்சவமும் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆண்டு தோறும் நடைபெறும் மாசித் திருவிழாவையொட்டி கொடியற்றம் நடந்த முதல் நாளே கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்நகர், குளச்சல் வட்டார பகுதிகளில் உள்ள ஏராளமான ஊர்களிலிருந்து முருக பக்தர்கள் காவடியேந்தி செல்வது வழக்கம். அதன்படி, பல்வேறு பகுதிகளிலிருந்து கொட்டும் மழையில் வேல் காவடி, பறக்கும் காவடி உள்ளிட்ட 200க்கு மேற்பட்ட விதவிதமான காவடிகளுடன் பக்தர்கள் திருச்செந்தூருக்கு புறப்பட்டனர். காவடி பவனியால் திங்கள்நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.

தூத்துக்குடியில் உள்ள முத்தாரம்மன் கோவிலில் மஹாகும்பாபிஷேகம் நேற்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதனை ஒட்டி சிறப்பு யாகங்கள் நடைபெற்ற பின்னர் புனித நீரால் கோவில் கலசங்கள் மற்றும் விமானங்களுக்கு அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

திருச்சியில் உள்ள அருள்மிகு சூளைக்கரை மாரியம்மன் கோவில் விரிவுபடுத்த பக்தர்கள் மற்றும் உபயதாரர்கள் அளித்த நன்கொடையால் திருப்பணிகள் சிறப்புடன் நிறைவடைந்து, நேற்று மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதற்காக கடந்த 8ஆம் தேதியன்று விக்னேஸ்வர பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. அதனைத்தொடர்ந்து காவிரியிலிருந்து புனிதநீர் எடுத்துவரப்பட்டு யாகசாலை பூஜையில் வைத்து பூஜிக்கப்பட்டது. நேற்று நான்காம் கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து, வேதமந்திரங்கள் முழங்க ராஜகோபுரம் மற்றும் உபகோயில் கோபர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சுவாமிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

புதுச்சேரி முத்தியல்பேட்டை ராமகிருஷ்ணா நகரில் உள்ள ஸ்ரீ ஹயக்ரீவர் கோயிலில் 16 ஆம் ஆண்டு ஏக தின லட்சார்ச்சனை நடைபெற்றது. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற வெண்டியும், தீய எண்ணங்கள் அனுகாதிருக்க வேண்டி ஹயக்ரீவர் சகஸ்ரநாம லட்சார்ச்சனை வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பெருமாளை தரிசித்தனர்.

புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள சிவசுப்பிரமணியர் கோயிலின் திருப்பணிகள் முடிவுற்று மகா கும்பாபிஷேகம் நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக, யாகசாலை பூஜையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர், வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்கள் முழங்க, கோயில் கோபுர கலசங்களில் ஊற்றி மகாகும்பாபி‍ஷேகம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் திரு. நாராயணசாமி, சட்டப்பேரவைத் தலைவர் திரு.வைத்திலிங்கம், சட்டப்பேரவை துணைத்தலைவர் திரு.சிவக்கொழுந்து ஆகியோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

புதுச்சேரி நகரப் பகுதியான சின்ன சுப்புராய பிள்ளை வீதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ தண்டு முத்துமாரியம்மன் கோயிலில், உலக நன்மை வேண்டி ஏகதின லட்சார்ச்சனை விழா நடைபெற்றது. நேற்று காலை விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கிய இவ்விழாவில் உலக நன்மை வேண்டி ஏகதின லட்சார்ச்சனை நடைபெற்றது. இந்த விழாவில் திரளான பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00