வைகுண்ட ஏகாதசியையொட்டி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதசுவாமி ஆலயத்தில் அதிகாலையில் நடைபெற்ற சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் : திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோயில் வைகுண்ட ஏகாதசி வைபவம் கோலாகலம்

Dec 18 2018 3:16PM
எழுத்தின் அளவு: அ + அ -

வைகுண்ட ஏகாதசியையொட்டி, புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் அருள்மிகு ரெங்கநாதர் சுவாமி கோயிலில், இன்று அதிகாலை, சொர்க்‍கவாசல் திறப்பு நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்‍தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதுமான, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமி ஆலயத்தில், ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி திருவிழா, பகல் பத்து திருமொழி, இராப்பத்து திருவாய்மொழி என கொண்டாடப்படுகிறது. பகல்பத்து திருமொழி நிறைவுற்று, வைகுண்ட ஏகாதசியின் முக்‍கிய நிகழ்வான சொர்க்‍கவாசல் திறப்பு, இன்று அதிகாலை நடைபெற்றது. விருச்சிக லக்‍னத்தில் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்ட நம்பெருமாள், ரத்தின அங்கி அணிந்து, பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் வழியாகச் சென்றார். அப்போது, அங்கு கூடியிருந்த பல்லாயிரக்‍கணக்‍கான பக்‍தர்கள், "ரெங்கா, ரெங்கா" என பக்திகோஷமிட்டவாறு, பரமபத வாசலைக் கடந்துச் சென்றனர்.

சென்னை தி.நகரில் உள்ள திருப்பதி பெருமாள் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறை திருஇந்தளுரில் அமைந்துள்ள பரிமள ரெங்கநாதர் ஆலயத்தில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பெருமாள் தங்க ரெத்தின அங்கியில் எழுந்தருளினார். அதனைத்தொடர்ந்து சிறப்பு அபிஷேக ஆராதனைகளுக்குப் பின், சொர்க்கவாசல் வழியாக நம்பெருமாள் வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளினார். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று கோவிந்தா கோவிந்தா என பக்தி முழக்கம் எழுப்பியபடி சுவாமி தரிசனம் செய்தனர்.

சென்னையை அடுத்த திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோவிலில் இன்று அதிகாலை பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி ‍கோலாகலமாக நடைபெற்றது. சுவாமியை நம்மாழ்வார் எதிர்கொண்டு வரவேற்றார். ஏராளமான பக்தர்கள் இதனை தரிசித்தனர்.

சின்ன காஞ்சிபுரத்தில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும், அஷ்டபூஜப் பெருமாள் கோவிலில், சொர்க்க வாசல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து​ கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கரூர் ஸ்ரீ அபயபிரதான ரெங்கநாதர் ஆலயத்தில் சுவாமி இன்று அதிகாலை பரமபத வாசல் வழியாக சுவாமி கடந்து வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோவிந்தா, கோவிந்தா என்ற பக்தர்கள் பக்தி முழக்கத்துடன் தரிசனம் செய்தனர்.

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, கரூர் பண்டரிநாதன் சுவாமி ஆலயத்தில் பரமபத வாசல் திறக்கப்பட்டது. பண்டரிநாத சுவாமி ரகுமாயி தாயாருடன் சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

கோவையில் புகழ்பெற்ற காரமடை அருள்மிகு அரங்கநாதர் திருக்கோவில் மற்றும் கோவை ராம்நகர் கோதண்டராமர் ஆலயத்தில் சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சி வெகுவிமரிசையுடன் நடைபெற்றது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் ரெங்கா, ரெங்கா என பக்திகோஷமிட்டவாறு பரமபதவாசலைக் கடந்துச்சென்று சுவாமியை தரிசனம் செய்தனர்.

மதுரை தல்லாகுளம் அருள்மிகு பிரசன்ன வெங்கடாசலபதி திருக்கோவிலில் மங்களவாத்தியங்கள் மற்றும் தீவட்டி பரிவாரங்களுடன் பரமபத வாசலில் பெருமாள் எழுந்தருளினார். அப்போது அங்கு கூடியிருந்த ஆயிரகணக்கான பக்தர்கள் "கோவிந்தா" கோவிந்தா எனும் பக்தி முழக்கம் எழுப்பி பக்தி பரவசத்துடன் வழிபட்டனர். இதனை தொடர்ந்து சுவாமி கோவிலை வலம் வந்து, பிறகு சயன கோல அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பொன்வரதராஜப் பெருமாள் கோவிலில் ஸ்வாமிக்கு திருமஞ்சனம் அபிஷேகம் மற்றும் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தது. ஸ்ரீதேவி, பூதேவி, ஸமேதமாக சுவாமி சொர்க்கவாசல் வழியாக எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவையொட்டி, ஜனகல்யாண் இயக்கம் சார்பில் 50 ஆயிரம் லட்டுகள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டன.

விருதுநகரில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, பிரசித்தி பெற்ற ஸ்ரீ ரெங்கநாதர், சீனிவாசப் பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவில்யானை சொர்க்கவாசலை திறக்க ரெங்கநாதர் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

திருப்பூரில் உள்ள அருள்மிகு வீரராகவ பெருமாள் திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி, இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. வீரராகவ பெருமாள் ராஜ அலங்காரத்தில் கருட வாகனத்தில் பரமபத வாசல் வழியாக எழுந்தருளி பக்தர்களுக்கும் காட்சி அளித்தார். பக்தர்களுக்கு 1 லட்சம் லட்டுகள் பிரச்சாதமாக வழங்கப்பட்டன.

திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு சௌந்திர ராஜபெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சௌந்தர ராஜபெருமாள் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து சொர்க்க வாசலாகிய வடக்கு வாசல் ஜீயர்களால் திறக்கப்பட்டது. திண்டுக்கல் மலையடிவார சீனிவாச பெருமாள் கோவில் உள்ளிட்ட வைணவ ஆலயங்களிலும் சொர்க்க வாசல் திறக்கும் நிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடைபெற்றது.

விழுப்புரத்தில் உள்ள வைணவ ஆலயங்களில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா கோலாகலமாக நடைபெற்றது. பல்வேறு பெருமாள் ஆலயங்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள அருள்மிகு மரகதவல்லி தாயார் சமேத மதனகோபாலசுவாமி திருக்கோவிலில், வைகுண்ட ஏகாதசி பெருவிழாவையொட்டி சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இவ்விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள வேணுகோபால சுவாமி ஆலயத்தில் சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

திருவாரூரில் உள்ள புலிவலம் அப்பன் பெருமாள் என்று அழைக்கப்படும் வெஙக்டாஜலபதி ஆலயத்தில், சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி, அதிகாலை முதலே பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் திருப்பதிசாரத்தில் உள்ள திருவாழ் மார்பன் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, இன்று அதிகாலை சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00