தமிழகம் முழுவதும் மகா கந்த சஷ்டி விழா : திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழாவில் ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம்

Nov 8 2018 6:15PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகம் முழுவதும் மகா கந்த சஷ்டி விழா கோலாகலமாக தொடங்கியுள்ளது. தொன்மையும், பெருமையும் மிக்‍க ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் நடைபெற்று வரும் கந்த சஷ்டி விழாவில் ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், தெய்வானையை முருகன் திருமணம் செய்து கொண்ட நிகழ்வு நடந்ததாகப் புராணங்கள் தெரிவிக்கின்றன. திருப்பரங்குன்றம் சுப்ரமணியசுவாமி கோவிலின் கருவறையில், 5 மலைகளை குடைந்து குகைகள் அமைக்கப்பட்டுள்ளன. பாறைகளில், திருமாலின் அவதாரங்களைக் குறிக்கும் சிற்பங்களும், முருகன் தெய்வானை திருமணக்கோலம் போன்ற கற்றூண்களும் கோயிலை அழகுற வைக்‍கும் வகையில் அமைந்துள்ளன. இத்தனை சிறப்பம்சங்கள் கொண்ட திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோயிலில், மகா கந்த சஷ்டி விழா வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. பக்‍தர்கள் காப்புகட்டி, தினந்தோறும் சரவணபொய்கையில் நீராடி சுவாமி தரிசனம் மேற்கொள்கின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00