சபரிமலையில், தரிசனம் செய்ய சென்ற பெண் பக்‍தருக்‍கு கடும் எதிர்ப்பு - சன்னிதானத்தில் நடந்த போராட்டத்தில் பத்திரிக்‍கையாளர் காயமடைந்ததால் பரபரப்பு

Nov 6 2018 5:39PM
எழுத்தின் அளவு: அ + அ -

சபரிமலையில் இன்று சாமி தரிசனம் செய்ய கணவருடன் வந்த பெண் பக்தருக்‍கு கடும் எதிர்ப்பு எழுந்ததால், காவல்துறையினர் அப்பெண்ணை பாதுகாப்புடன் திருப்பி அனுப்பினர். இதனால் சபரிமலை வளாகத்தில் மீண்டும் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

சபரிமலையில், அத்தாழைப் பூஜை எனப்படும் "சித்திரை ஆட்ட விஷேசம்" விழாவுக்காக, ஐயப்பன் கோயில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. இதையடுத்து அங்கு திரளான ஐயப்ப பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். நீதிமன்றத்தின் அனுமதியை அடுத்து, பெண் பக்‍தர்கள் வருகை தருவார்கள் என்பதால், கமாண்டோ படை உள்பட இரண்டாயிரத்து 300 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இன்று காலை ஐயப்பனை தரிசிக்க, கணவருடன் வந்த அஞ்சு என்ற பெண் பக்தரால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கேரள மாநிலம், ஆலப்புழையைச் சேர்ந்த 25 வயதான அந்தப் பெண், தனது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் சபரிமலைக்கு சென்றுள்ளார். தனக்கு பாதுகாப்பு கேட்டு காவல் துறையிடம் முறையீடு செய்தார். அவரிடம் பம்பா போலீசார் விசாரணை நடத்தினர். அவருக்‍கு பக்‍தர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததால், காவல்துறை பாதுகாப்புடன் அவர் அங்கிருந்து திருப்பி அனுப்பப்பட்டார்.

இதேபோல், லலிதா என்ற 52 வயது பெண்மணி ஒருவருக்‍கும் பக்‍தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும் அவர் 50 வயதை கடந்தவர் என்பது உறுதிசெய்யப்பட்ட பிறகு, அவர் குடும்பத்துடன் சன்னிதானத்திற்குள் அனுமதிக்‍கப்பட்டார்.

இதனிடையே, சன்னிதானத்தில் நடந்த போராட்டத்தின்போது, அதனை படம்படிக்‍கச் சென்ற அம்ரிதா தொலைக்‍காட்சி ஒளிப்பதிவாளர் பிஜு காயமடைந்தார். இதுபோன்ற சர்ச்சைகளால் சபரிமலை வளாகம் இன்றும் பரபரப்புடன் காணப்படுகிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00