தாமிரபரணி மகாபுஷ்கர விழா - ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனிதநீராடி வழிபாடு

Oct 15 2018 3:44PM
எழுத்தின் அளவு: அ + அ -

தாமிரபரணி புஷ்கர திருவிழாவையொட்டி பாபநாசம் தாமிரபரணி ஆற்றுக்கு ஆரத்தி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

144 ஆண்டுகளுக்கு பின்னர், தாமிரபரணி மஹாபுஷ்கர விழா வெகுசிறப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த 11ந் தேதி தொடங்கிய இவ்விழா, வரும் 23ம் தேதி வரை நடைபெற உள்ளது. நெல்லை, பாபநாசம், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி உள்பட 149 பகுதிகளில் புஷ்கர விழாவிற்கான பூஜைகள் நடைபெறுகின்றன. இதில் தமிழகம் மட்டுமின்றி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் லட்சகணக்கானோர் கலந்துக்கொண்டு புனிதநீராடி வழிபடுகின்றனர்.

பாபநாசம், நெல்லை சந்திப்பு, குறுக்குத்துறை உள்ளிட்ட பல பகுதிகளில் பக்தர்கள் தாமிரபரணி ஆற்றில் புனித நீராடி சிறப்பு பூஜைகள் செய்தனர். இதனைத்தொடர்ந்து நேற்றிரவு தாமிரபரணி அன்னைக்கு ஆரத்தி நிகழ்ச்சி நடைபெற்றது. இதேபோல், நெல்லை சந்திப்பு குறுக்குத்துறை ஆற்றுக்கு ஆரத்தி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தாமிரபரணி அன்னைக்கு பெண்கள் விளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர். பின்னர் விளக்குகளை ஆற்றில் விட்டனர். இதனையொட்டி நெல்லை சந்திப்பு, தைப்பூச மண்டபம் உள்ளிட்ட பல பகுதிகளில் ஆறுகளில் விளக்குகள் ஏற்றி வழிபாடு செய்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00