திருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவம் : சின்ன சேஷ வாகனத்தில் மலையப்பசுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்
Oct 11 2018 1:34PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் இரண்டாவது நாளான இன்று சின்ன சேஷ வாகனத்தில் மலையப்பசுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருப்பதி மலையில் நேற்று துவங்கி நடைபெறும் ஒன்பது நாள் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் இரண்டாவது நாளான இன்று காலை, உற்சவர் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவி சமேதராக ஐந்து தலைகள் கொண்ட தங்க நாக வாகனத்தில் எழுந்தருளி, கோவில் மாடவீதிகளில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பக்தர்களின் பல்வேறு வகையான கலை நிகழ்ச்சிகள், திவ்ய பிரபந்த கோசம், நான்மறை வேத கோஷம், பக்தர்களின் பக்தி கோஷம் ஆகியவற்றிற்கு இடையே யானைகள், குதிரைகள், காளைகள் ஆகியவை முன்செல்ல கோலாகலமாக நடைபெற்ற ஏழுமலையானை சின்ன சேஷ வாகன சேவையை பல்வேறு மாநிலங்களில் இருந்தும் திருப்பதி மலைக்கு வந்துள்ள பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.