துலாம் ராசியில் இருந்து விருச்சிகம் ராசிக்கு குருபகவான் பெயர்ச்சி : தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சிறப்பு பூஜைகள்

Oct 5 2018 4:16PM
எழுத்தின் அளவு: அ + அ -
துலாம் ராசியில் இருந்து விருச்சிகம் ராசிக்கு குருபகவான் பெயர்ச்சி அடைந்ததை அடுத்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

நவக்கிரக குரு பரிகார ஸ்தலமான ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில், குருபெயர்ச்சி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

தென்னிந்தியாவிலேயே குருபகவான் தனிசன்னதி கொண்டு அமர்ந்து அருள் பாலிக்கும் காஞ்சிபுரம் ஸ்ரீகாயாரோகனீஸ்வரர் ஆலயத்தில் ஏராளமானோர் தீபம்ஏற்றி லட்சார்ச்சனைகள் செய்து வழிபட்டனர். இதேபோல், காஞ்சிபுரம் அடுத்த கோவிந்தவாடி அகரம் கிராமத்தில் யோக தட்சிணாமூர்த்தி என்கிற குரு பகவான் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

திருவள்ளூர் மாவட்டம், திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு தட்சிணாமூர்த்தி திருக்கோயிலில், குருபெயர்ச்சி பரிகார ஹோமம் நடைபெற்றது. பின்னர் தீபாராதனை செய்யப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனர்.

வேலூர் கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில், சிறப்பு யாகம், பூஜைகள் நடத்தப்பட்டு, மஹாதீபாராதனை நடைபெற்றது.

நாகை மாவட்டம் மயிலாடுதுறை வதான்யேஸ்வரர் ஆலயத்தில், தனி சன்னதியில் அமைந்துள்ள தட்சிணாமூர்த்திக்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும், தங்கக் கவசம் சாற்றி வழிபாடு செய்யப்பட்டு தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருள்மிகு மீனாட்சி சொக்கநாதர் ஆலய குருபகவான் சன்னதியில், பால், தயிர், சந்தனம், விபூதி, இளநீர் போன்ற 21 வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

கரூர் ஸ்ரீகல்யாணபசுபதீஸ்வரர் ஆலயத்தில், குருபகவானுக்கு பக்தர்களால் வழங்கப்பட்ட மலர்களைக் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர், குருபெயர்ச்சியின்போது சிறப்பு மஹாதீபாராதனை நடைபெற்றது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Wed,Sat : 19:00

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • KALLADATHU ULAGALAVU

  Sat : 17:30

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

 • ADUKALAM - Jayaplus

  Sun : 10:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3024.00 Rs. 3234.00
மும்பை Rs. 3046.00 Rs. 3226.00
டெல்லி Rs. 3059.00 Rs. 3240.00
கொல்கத்தா Rs. 3059.00 Rs. 3237.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 40.60 Rs. 40600.00
மும்பை Rs. 40.60 Rs. 40600.00
டெல்லி Rs. 40.60 Rs. 40600.00
கொல்கத்தா Rs. 40.60 Rs. 40600.00