விநாயகர் சதுர்த்தி விழா : முதுமலையில் யானைகள் ஒன்றுகூடி விநாயகருக்கு சிறப்பு பூஜை - திரளான சுற்றுலாப் பயணிகள், உள்ளூர் மக்கள் பங்கேற்பு

Sep 14 2018 12:24PM
எழுத்தின் அளவு: அ + அ -

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, முதுமலையில் யானைகள் ஒன்றுகூடி, விநாயகருக்கு சிறப்பு பூஜை நடத்தின. திரளான சுற்றுலாப் பயணிகளும், உள்ளூர் மக்களும் இதில் பங்கேற்றனர்.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம், ஆசியாவின் மிகப்பெரிய யானைகள் முகாமாகத் திகழ்கிறது. லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகின்றனர். இங்கு நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இன்று, விநாயகர் சதுர்த்தி திருநாளை முன்னிட்டு, யானைகள் குளிப்பாட்டப்பட்டு, மாலைகள் அணிவிக்கப்பட்டு, சிறப்பு அலங்காரங்களுடன் அங்குள்ள விநாயகர் கோவிலுக்கு அணிவகுத்து வந்தன. இதனைத் தொடர்ந்து, சிறப்பு பூஜை நடைபெற்றது. கிருஷ்ணா என்ற யானை பூஜை மணியை அடித்து, மூன்றுமுறை கோவிலை வலம்வந்து, முன்னங்கால்களை உயர்த்தி, விநாயகரை வணங்கியது. விநாயகருக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டபோது, யானைகள் அனைத்தும் ஒன்றாக பிளிரி, முழக்கம் எழுப்பியது, முதுமலையில் நீண்டதூரம் வரை எதிரொலித்தது.

இதனைத் தொடர்ந்து, அனைத்து யானைகளுக்கும் கரும்பு, தேங்காய், வெல்லம் மற்றும் பல்வேறு உணவுகள் வழங்கப்பட்டன. யானைகள் நடத்திய விநாயகர் பூஜையை திரளான சுற்றுலாப் பயணிகள் கண்டு மகிழ்ந்தனர். வனத்துறை அதிகாரிகள், அப்பகுதி மக்கள் உள்ளிட்டோரும் யானைகள் நடத்திய பூஜையில் பங்கேற்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00