மதுரை மீனாட்சி கோவிலுக்குச் சொந்தமான நிலம் மோசடி : போலி பட்டா தயாரிப்பு - பூசாரிகள் 6 பேர் நிரந்தர பணி நீக்கம்

Sep 6 2018 3:06PM
எழுத்தின் அளவு: அ + அ -

மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குச் சொந்தமான 50 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை போலி பட்டா தயாரித்து விற்பனை செய்ய முயன்ற கோவில் பூசாரிகள் 6 பேர் நிரந்தரமாக பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலின் உப கோயிலான செல்லத்தம்மன் கோயிலுக்கு, பக்தர்களால் வழங்கப்பட்ட இனாம் நிலம், மதுரை பழங்காநத்தம் புறவழிச் சாலையிலுள்ள பொன்மேனி அருகில் உள்ளது. 2 ஏக்கர் 4 சென்ட் நிலத்தின் தற்போதைய சந்தை மதிப்பு 50 கோடி ரூபாயாகும். இந்த நிலத்தை, செல்லத்தம்மன் கோயில் பூசாரிகள் உள்ளிட்டோர், தங்களுக்குச் சொந்தமானது எனக் கூறி, விற்பனை செய்ய ஏற்பாடு செய்தனர்.

இந்த மோசடி சம்பவம் கண்டறியப்பட்டு, இலாகா பூர்வ விசாரணை நடத்தப்பட்டு பூசாரிகள் 6 பேரும் நிரந்தரமாக பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00