கழகப் பொதுச்செயலாளர் தியாகத் தலைவி சின்னம்மா பிறந்தநாளையொட்டி தமிழகத்தின் பல்வேறு ஆலயங்களில் கழகத் தொண்டர்கள் சிறப்பு வழிபாடு : ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள்

Aug 20 2018 3:31PM
எழுத்தின் அளவு: அ + அ -

கழகப் பொதுச்செயலாளர் தியாகத் தலைவி சின்னம்மா பிறந்தநாளையொட்டி, தமிழகத்தின் பல்வேறு ஆலயங்களில் கழகத் தொண்டர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். ஏழை, எளியோருக்‍கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

கழகப் பொதுச் செயலாளர் தியாகத்தலைவி சின்னம்மா பிறந்தநாளை முன்னிட்டு, பம்மல் அம்மா பேரவை நகர கழகம் சார்பில், மூங்கில் ஏரியில் உள்ள ஸ்ரீதேவி கருமாரி அம்மன் ஆலயத்தில் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், பம்மல் நகர அம்மா பேரவை செயலாளர் திரு.ராமகிருஷ்ணன், பம்மல் நகர கழக செயலாளர் திரு.பிஜே. ஜெயகோபி, பம்மல் நகர அவைத் தலைவர் சாம்ராஜ் புண்ணியகோடி, அம்மா பேரவைத்தலைவர் திரு.ஜெயகதிர்வேலு, அம்மா பேரவை இணைச் செயலாளர் திரு.தினகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ஈரோடு புறநகர் மாவட்டம் கோபிசெட்டிபாளையம் ஒன்றியக்‍கழகம் சார்பில் பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் மற்றும் அர்ச்சனை நடைபெற்றது. பின்னர் தங்கத் தேர் இழுத்து திருக்கோயிலை வலம் வந்து கழகத்தினர் வழிபாடு நடத்தினர். இந்நிகழ்ச்சியில், ஈரோடு புறநகர் மாவட்ட கழகச் செயலாளர் திரு.எஸ்.ஆர். செல்வம், கோபிசெட்டிபாளையம் ஒன்றியக் கழகச் செயலாளர் திரு.சி.குப்புசாமி, ஒன்றியக்‍கழகச் செயலாளர்கள் திரு.கார்த்திகேயன், திரு.பொன்னுசாமி, திரு.தங்க சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

கழக பொதுச் செயலாளர் தியாகத் தலைவி சின்னம்மா பிறந்தநாளை முன்னிட்டு, விருதுநகர் மேற்கு மாவட்டம், சிவகாசி நகரக்‍ கழகம் சார்பில், சிவகாசி ஸ்ரீ காசி விஸ்வநாதர் திருக்கோவிலில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நகரக்‍கழகச் செயலாளர் திரு.பிச்சைக்கனி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

சிவகங்கை மாவட்டக்‍ கழகம் சார்பில் காரைக்குடி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் வெள்ளி ரதம் இழுத்து வழிபாடு நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மாவட்டக்‍ கழகச் செயலாளர் திரு. K.K. உமாதேவன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர் திரு.தேர்போகி பாண்டி, சாக்கோட்டை ஒன்றியக்‍கழகச் செயலாளர் திரு. கே.ஆர்.வி. செல்வம், காரைக்குடி நகரக்‍கழக செயலாளர் திரு. P.L. சரவணன் மற்றும் கழக நிர்வாகிகள் திரளாக பங்கேற்று வெள்ளி ரதம் இழுத்து வழிபட்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00