திருப்பதியில் கும்பாபிஷேக விழா நிறைவு : அனைத்து வகையான தரிசனங்களும் மீண்டும் தொடங்கின

Aug 17 2018 5:21PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மகா கும்பாபிஷேக விழாவையொட்டி கடந்த 8 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நடைபாதை தரிசனம், சிறப்பு தரிசனம், 300 ரூபாய் கட்டண தரிசனம் ஆகியவை இன்று காலை முதல் மீண்டும் தொடங்கின.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஆகம விதிகளின்படி, மகா சம்ப்ரோக்‌ஷணம் எனப்படும் மகா கும்பாபிஷேக விழா நேற்று வெகு விமரிசையாக நடந்தது. இதனைத் தொடர்ந்து, கருட பஞ்சமியையொட்டி, மாலை 5 மணிக்கு, உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமி கருட வாகனத்தில் நான்கு மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 9 மணியளவில், பெரிய சே‌ஷ வாகனத்தில், மீண்டும் உற்சவ மூர்த்திகள் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதையடுத்து கும்பாபிஷேக விழா நிறைவு பெற்றது.

இதனிடையே, கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 9-ம் தேதி முதல் நடைபாதை தரிசனம், சிறப்பு தரிசனம், 300 ரூபாய் கட்டண தரிசனம் ஆகியவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இலவச தரிசனத்தில் மட்டும் குறைந்த அளவிலான பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், கடந்த 8 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அனைத்து வகையான தரிசனங்களும் இன்று காலை முதல் மீண்டும் தொடங்கியுள்ளன.

நள்ளிரவு 12 மணி முதல் நடைபாதை, இலவச தரிசனம் நேரம் குறித்த அட்டை ஆகியவை வழங்கப்பட்டன. மேலும், கோயிலில் நடைபெறும் அனைத்து ஆர்ஜித சேவைகளும் வழக்கம்போல் நடைபெற்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00