தீவிபத்து காரணமாக மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தடை செய்யப்பட்ட கடைகள் நீதிமன்ற உத்தரவுப்படி திறப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி

Jul 17 2018 6:07PM
எழுத்தின் அளவு: அ + அ -

உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுபடி மதுரை மீனாட்சியம்மன் கோவில் அம்மன்சன்னதி மற்றும் புதுமண்டபத்தில் உள்ள 351 கடைகள் திறக்கப்பட்டதால் வியாபாரிகள் மகிழ்ச்0.சி அடைந்துள்ளனர்.

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில், கடந்த பிப்ரவரி 2-ம் தேதியன்று ஏற்பட்ட தீ விபத்தால், அம்மன் சன்னதியில் இருந்த 110 கடைகள் எரிந்து சாம்பலாயின. மேலும் கோவில் தூண்கள் சேதமடைந்தது. இச்சம்பவம் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியதால், பிப்ரவரி 3-ம் தேதியன்றே கோவிலுக்கு எதிரேயுள்ள புதுமண்டபத்தில் உள்ள 300 கடைகள் முன்னறிவிப்பின்றி மூடப்பட்டன.

இந்நிலையில் கோவில் தீ விபத்து தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், கோவிலுக்குள் கடைகளை அகற்றவேண்டும்- மொபைல் போன்களுக்கு அனுமதி இல்லை- கடைகளை டிசம்பர் 31-ம் தேதி வரை திறக்கலாம் என பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது. இதனைத் தொடர்ந்து அம்மன் சன்னதியில் உள்ள கடைகளை திறக்க அனுமதி கோரிய வழக்கில், டிசம்பர் 31-ம் தேதி வரை மட்டும் கடைகளை திறப்போம் என பிரமாண பத்திரம் கொடுக்க வேண்டும் என்றும் கடை வாடகை பாக்கி தொகைகளை உடனடியாக செலுத்தவேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளுடன் கடையை திறக்க உத்தரவிட்டனர்.

இதையடுத்து இன்று 351 கடைகளும் சிறப்பு பூஜையுடன் திறக்கப்பட்டன. கடை திறக்கப்பட்டது மகிழ்ச்சி ஏற்படுவதாகவும், தீயில் எரிந்த கடைகளை விரைந்து சரி செய்ய வேண்டும் எனவும் கடை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00