நாகை பரசலூர் வீரட்டேஸ்வரர் ஆலய திருக்கல்யாண உற்சவம் : திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு

Jul 9 2018 1:12PM
எழுத்தின் அளவு: அ + அ -
நாகை பரசலூர் வீரட்டேஸ்வரர் ஆலயத்தின் திருக்கல்யாண உற்சவத்தில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர்.

நாகை மாவட்டம் செம்பனார்கோயிலை அடுத்த பரசலூரில் சமயக்குரவர்களால் பாடல் பெற்றதும், சிவன் தட்சனுடைய யாகத்தை அழித்து, வீரச்செயல்புரிந்த புராண வரலாறு உடையதுமான வீரட்டேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் திருக்கல்யாண உற்சவம் நேற்று நடைபெற்றது. இதனையொட்டி, சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து, யாகசாலை மண்டபத்திற்கு சுவாமி மற்றும் அம்பாள் எழுந்தருளினர். அங்கு வேதியர்கள் யாகம் வளர்த்து, வேதமந்திரங்கள் முழங்க, மாங்கல்யதாரணம் நடைபெற்று, திருமண வைபவம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். தொடர்ந்து, சுவாமி மற்றும் அம்பாள் வீதியுலாவாக எழுந்தருளினர்.

இதனிடையே, நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை வனவிலங்குகள் சரணாலயத்தில் அமைந்துள்ள சேர்வராயர் கோவிலில் மழை வேண்டி நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில், கோடியக்கரை மற்றும் கோடியக்காடு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த இரண்டாயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மீன்பிடித் தொழில் சிறப்பாக நடைபெறவும், கடல்சீற்றம், புயல், போன்ற இயற்கை சீற்றங்களின் போது பாதுகாப்பாக மீன் பிடித்துக்கொண்டு கரை திரும்பவும் காவல் தெய்வமாக உள்ள சேர்வராயருக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Wed,Sat : 19:00

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • KALLADATHU ULAGALAVU

  Sat : 17:30

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

 • ADUKALAM - Jayaplus

  Sun : 10:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3024.00 Rs. 3234.00
மும்பை Rs. 3046.00 Rs. 3226.00
டெல்லி Rs. 3059.00 Rs. 3240.00
கொல்கத்தா Rs. 3059.00 Rs. 3237.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 40.60 Rs. 40600.00
மும்பை Rs. 40.60 Rs. 40600.00
டெல்லி Rs. 40.60 Rs. 40600.00
கொல்கத்தா Rs. 40.60 Rs. 40600.00