தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திருக்கோயில்களில் கும்பாபிஷேகம் : பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

Jul 2 2018 10:45AM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திருக்கோயில்களில் புனரமைப்பு பணிகள் நிறைவுற்று கும்பாபிஷேகம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

சேலம் செவ்வாய்பேட்டை பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த விழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள், பெண்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.

நாகை மாவட்டம், தெத்தி கிராமத்தில் சுமார் 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த மீனாட்சிஅம்பாள் சுந்தரேஸ்வரர் கோயிலில், சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கோயிலில் உள்ள கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

நாகை மாவட்டம், செம்பனார்கோயிலை அடுத்த ஆறுபாதி மேட்டிருப்பில் அமைந்துள்ள காளியம்மன் ஆலயத்தில், மஹாகும்பாபிஷேகம் நடைபெற்றது. வேத விற்பன்னர்கள் வேதங்கள் ஓத, மேள தாளங்கள் முழங்க கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் காளியம்மனுக்கு புனித நீர் கொண்டு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

திருச்சி மாவட்டம், ஜீயபுரம் அடுத்துள்ள அல்லூர் கிராமத்தில், அருள்பாலித்துவரும் அருள்மிகு ஸ்ரீமகா மாரியம்மன் கோயில் திருப்பணிகள் நிறைவுற்று, மகாகும்பாபிஷேகம் நடைப்பெற்றது. இதில் ஜீயபுரம், அல்லூர், முக்கொம்பு, திருப்பராய்துறை, திருச்செந்துறை உள்ளிட்ட உள்ளிட்ட கிராமங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து சென்றனர்.

அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே இலந்தைக்கூடம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு மாரியம்மன் திருக்கோவிலில் மஹாகும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனையடுத்து மூலஸ்தானத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் அருள்மிகு மாரியம்மனுக்கு புனிதநீரால் மஹாஅபிஷேகம் நடைபெற்று, பின்னர் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பெருந்திரளான பக்தர்கள் மஹாகும்பாபிஷேகத்தை கண்டு தரிசித்தனர்.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் சாலையில், புதியதாய் கட்டப்பட்ட அருள்மிகு செல்வகணபதி திருக்கோவிலில் குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த குடமுழுக்கு விழாவில் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோபுர தரிசனம் செய்து, அருள்மிகு செல்வகணபதியை வழிபட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூரில் உள்ள திரௌபதி அம்மன் ஆலயத்தின் 94-ம் ஆண்டு அக்னி வசந்த உற்சவ பெருவிழா கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில், துரியோததன் படுகளம் நடைபெற்றது. அதில் தெருக்கூத்து கலைஞர்கள் துரியோதனன் போல் வேடமணிந்து பஞ்சபாண்டவா்களில் பீமன் துரியோதனனை கொல்லும் நிகழ்வு நடைபெற்றது. கோயில் வளாகத்தில் 100 அடி நீளமுள்ள துரியோதனன் சிலை உருவாக்கப்பட்டு போர்க்கள காட்சி நடித்து காட்டப்பட்டது. துரியோதனன் படுகளம் நடைபெற்றால் மழை வரும் என்பது முன்னோரின் நம்பிக்கை அதனால் இந்நிகழ்வு மிக சிறப்பாக நடைபெற்றது. துரியோதனன் படுகளத்தை காண ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்துக் கொண்டனா்.

நெல்லை மாவட்டம், தென்காசியை அடுத்து பாவூர்சத்திரம் அருகே உள்ள நவநீத கிருஷ்ணபுரத்தில் அமைந்துள்ள பெரியம்மன் கோவிலின் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மகாதீபராதனை நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.

சைவ சமயத்தின் தலைமைபீடமாக விளங்கும் திருவாரூர் தியாகராஜ சுவாமி ஆலயத்தின் பங்குனி மாத உற்சவம் ஆகம விதிகளுக்கு முரணாக இந்து சமய அறநிலையத்துறை நடத்திவரும் நிலையில், ஆலய கொடிமரத்தில் உற்சவ கொடி கிழிந்து அறுந்து தொங்குவதால், திருவாரூர் பகுதி மக்களுக்கு எந்த பேராபத்தும் வராமல் இருக்க பக்தர்கள் ஆலய பிரகாரத்தினை வலம் வந்து பரிகார பூஜை செய்தனர்.

தூத்துக்குடி அருகே உள்ள சங்கரபெரி சந்தனமாரியம்மன் கோவில் ஆனி மாத திருவிழாவினை ஒட்டி உலக நன்மை வேண்டி 508 திருவிளக்குகள் ஏற்றி பெண்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர் மேலும் அம்மனுக்கு சிற்ப்பு அபிஷேகம் பூஜைகளும் நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி ராமகிருஷ்ணா நகரில் உள்ள ஹயக்ரீவர் கோயிலில் திருப்பவித்ரோத்ஸவ விழா கடந்த 26 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து தினமும் மூலவர், உற்சவர் திருமஞ்சனம் மற்றும் 90 திருவாதாரானம் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கருடசேவை நேற்று நடைபெற்றது. இதனை தொடர்ந்து சுவாமி வீதியுலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பெருமாளை தரிசித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00