மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் தங்கத்தேர் எங்கே? : 2 ஆண்டுகளாக தங்கத்தேரை காணவில்லை என பக்தர்கள் குற்றச்சாட்டு

May 22 2018 10:56AM
எழுத்தின் அளவு: அ + அ -

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்ற விழாக்‍களில் தங்கத்தேர் பயன்படுத்தப்படாதது குறித்து, சந்தேகத்தின் அடிப்படையில் பக்‍தர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதா? என்பது குறித்து, உயர்நீதிமன்றத்தில் வழக்‍கு தொடரப்போவதாகவும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

அறுபடை வீடுகளில் முதற்படை வீடான மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், சிறப்பு வாய்ந்த தங்கத்தேர் முக்‍கிய விழாக்‍களின்போது பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்ற எந்த கோயில் நிகழ்ச்சிகளிலும் தங்கத்தேர் பயன்படுத்தப்படவில்லை. கடந்த 2 ஆண்டுகளில் சுவாமி திருக்‍கல்யாண நிகழ்ச்சி, வைகாசி விசாகம், கார்த்திகை தீபம், பங்குனி பெருவிழா, தேரோட்டம் உள்ளிட்ட பல்வேறு விழாக்‍கள் நடைபெற்ற போதிலும், சுவாமிக்‍கு தங்கத்தேர் அலங்கார உற்சவம் நடக்‍கவே இல்லை என பக்‍தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் கோயிலுக்‍கான வருமானமும், 50 லட்சம் ரூபாய் அளவுக்‍கு வருமானம் பாதிப்படைந்துள்ளது.

இந்த தங்கத்தேர் என்ன ஆனது? ஏன் பக்‍தர்களிடம் இருந்து மறைத்து வைக்‍கப்பட்டுள்ளதா? ஏதேனும் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதா? என்பது குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ள நிலையில், உயர்நீதிமன்றத்தில் வழக்‍கு தொடரப்போவதாக பக்‍தர்களும், சமூக ஆர்வலர்களும் தெரிவித்துள்ளனர். மேலும் சிலைக்‍ கடத்தில் தடுப்புப் பிரிவு அதிகாரி பொன். மாணிக்‍கவேல் தலைமையில் குழு அமைத்து, தங்கத்தேர் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் கோரிக்‍கை விடுத்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00