உலகப் புகழ்பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் திருக்‍கோயிலில் சித்திரைத் திருவிழா தொடக்‍கம் - பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து குவிந்த திருநங்கைகள்

Apr 18 2018 5:29PM
எழுத்தின் அளவு: அ + அ -

உலகப் புகழ்பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் திருக்‍கோயிலில் சித்திரைத் திருவிழா விமரிசையாக தொடங்கியுள்ளது. இதையொட்டி பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்‍கள், கூழ் எடுத்துக்‍கொண்டு ஊர்வலமாகச் சென்று வழிபாடு நடத்தினர்.

விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள கூவாகம் கூத்தாண்டவர் திருக்‍கோயிலில் சித்திரைத் திருவிழா நேற்று மாலை சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியுள்ளது. அடுத்த மாதம் 4ம் தேதி வரை 18 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் முக்‍கிய நிகழ்ச்சிகளான, திருநங்கைகள் தாலி கட்டிக்‍கொள்ளும் நிகழ்ச்சி வரும் 1ம் தேதியும், 2ம் தேதி அரவான் களபலி கொடுக்‍கும் நிகழ்ச்சியும், பின்னர் கூத்தாண்டவர் திருத்தேரோட்டமும் நடைபெறும். டெல்லி, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், அமெரிக்‍கா, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான திருநங்கைகள் இவ்விழாவில் கலந்துகொண்டுள்ளனர்.

விழாவின் ஒரு பகுதியாக மிஸ் கூவாகம் அழகிப்போட்டி, நடனம் மற்றும் பாட்டுப்போட்டி உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00