ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஜீயர் சுவாமிகளின் திருஉடல் நல்லடக்கம் : ஏராளமானோர் பங்கேற்பு

Mar 20 2018 5:32PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஜீயர் சுவாமிகளின் திருஉடல் நல்லடக்‍கம் கொள்ளிடக்‍கரை பெரியாஸ்ரமத்தில் நடைபெற்றது. இதில் ஆயிரக்‍கணக்‍கான பக்‍தர்கள் கலந்து கொண்டனர்.

ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆஸ்ரமம் 11வது பட்டம் ஸ்ரீமுஷ்ணம் ஸ்ரீமத் ஆண்டவன் ஸ்ரீரங்க ராமானுஜ மகாதேசிகன் ஜீயர் சுவாமிகள், நேற்று சென்னையில் காலமானார். ஜீயர் சுவாமிகளின் திருவுடல் சென்னையிலிருந்து நேற்றிரவு திருச்சி ஸ்ரீரங்கம் கொள்ளிடக்‍கரைக்‍கு கொண்டு வரப்பட்டு, அங்கு திரளான பக்‍தர்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் ஸ்ரீரங்கம் கொள்ளிடக்‍கரை பெரியாஸ்ரமத்தில் அந்திமக்‍கிரியை மற்றும் நல்லடக்‍கம் நடைபெற்றது. திருப்பதி கோயில் தலைமை அர்ச்சகர் சேஷாத்திரி தலைமையில், திருப்பதி கோயில் மாலை மரியாதை செலுத்தப்பட்டது.

திருவுடல் நல்லடக்‍க நிகழ்ச்சியில், அஹோபில மட 46வது பட்டம் ஜீயர் சுவாமிகள், மன்னார்குடி சென்டலழங்கார ஜீயர், கழக அமைப்புச் செயலாளர் திரு.ஆர்.மனோகரன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00