சாம்பல் புதன் தினமான கிறிஸ்தவ மக்கள் தவக்காலம் தொடக்கம் : தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

Feb 14 2018 3:30PM
எழுத்தின் அளவு: அ + அ -

சாம்பல் புதன் தினமான இன்று கிறிஸ்தவ மக்‍கள் தவக்‍காலத்தை தொடங்கி உள்ளனர். இதனையொட்டி தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன.

ஏசு​பிரான் சிலுவை சுமந்து பட்ட துன்பத்தை கிறிஸ்தவ மக்‍கள் சிலுவை பாடாக 41 நாட்கள் கடைப்பிடித்து வருகின்றனர். இதன்படி சாம்பல் தினமான இன்று கிறிஸ்தவ மக்‍கள் இன்று தவக்‍காலத்தை தொடங்கி உள்ளனர். இதனையொட்டி தேவாலாயங்களில் சிறப்பு பிரத்தனைகள் நடைபெற்றன.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள பிரசித்தி பெற்ற கோட்டாறு புனித சவேரியார் பேராலயத்தில் நடைபெற்ற திருப்பலி வழிபாட்டில் தவகாலத்தின் அடையாளமாக சாம்பல் அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றறது. இதில் கோட்டாறு மறைமாவட்ட ஆயர் நாசரேன் சூசை மற்றும் தேவாலய பங்கு தந்தைகள் கலந்துகொண்டனர்.

பிரசித்தி பெற்ற தூத்துக்‍குடி பனிமய மாதா ஆலயத்தில் தவக்‍காலத் தொடக்‍கத்தையொட்டி சிறப்பு பிராத்தனைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான கிறிஸ்தவ மக்‍கள் கலந்து கொண்டு வழிப்பட்டனர்.

திருச்சியில் உள்ள பசிலிக்‍கா பேராலயத்தில் நடைபெற்ற தவக்‍காலத் தொடக்‍க வழிப்பாட்டில் கிருஸ்தவ மக்‍கள் கலந்து கொண்டு சாம்பலிட்டு வழிபட்டனர். ஏசுபிரானின் தவக்‍காலத் துன்பத்தை உணர்த்தும் பாடல்கள் பாடப்பட்டன.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற வேளாங்கண்ணி ஆரோக்‍கிய மாதா பேராலயத்தில் நடைபெற்ற தவக்‍காலத் தொடக்‍க நிகழ்ச்சியில் ஏராளமான கிறிஸ்தவ மக்‍கள் கலந்து கொண்டு, நெற்றியில் சாம்பல் பூசியூம்,​ஜெபமாலை, காவி உடை அணிந்தும் தவக்‍கால விரதத்தை தொடங்கினர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள தூயபாத்திமா அன்னை திருத்தலத்தில், தவக்‍காலத்திற்கான விபூதி பூசும் திருநாள் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

புதுச்சேரி மாநிலத்திலும் தவக்‍கால தொடக்‍தையொட்டி சிறப்பு பிரத்தனைகள் நடைபெற்றன. புதுச்சேரி மிஷன் வீதியில் உள்ள பழைமையான தூய ஜென் மராக்‍கினி அன்னை பேராலயம், தூய இருதய ஆண்டவர் பசிலிக்‍கா ஆலயம், வில்லியனூர் லூர்து மாத தேவாலயம், நெல்லிதோப்பு விண்ணேற்பு அன்னை, புனித அந்தோணியார், அரயாங் குப்பம் மாதா கோயில் உள்பட பல்வேறு கிறிஸ்துவ தேவாயங்களில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் ஏராளமான கிருஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00