சபரிமலையில் மகரவிளக்குக் கால தரிசனம் நிறைவு : பந்தளம் மன்னர் பிரதிநிதி முன்னிலையில் நடை அடைக்கப்பட்டது

Jan 20 2018 11:49AM
எழுத்தின் அளவு: அ + அ -

சபரிமலையில் மகரவிளக்குக்‍ கால தரிசனம் நேற்று இரவுடன் நிறைவடைந்தது. இதையொட்டி இன்று காலை பந்தளம் மன்னர் பிரதிநிதி முன்னிலையில் நடை அடைக்கப்பட்டது.

கேரள மாநிலம், சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் 1ம் தேதி முதல் தொடர்ந்து 60 நாட்கள் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இந்த நாட்களில் பல மாநிலங்களில் இருந்தும் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதமிருந்து ஐயப்பனை தரிசனம் செய்வர். இந்த ஆண்டு மண்டல பூஜை மற்றும் மகரவிளக்குப் பூஜையை முன்னிட்டு கடந்த நவம்பர் 15ம் தேதி மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. இந்த ஆண்டுக்காக தேர்வு செய்யப்பட்ட புதிய மேல்சாந்தி உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி கோயில் நடையைத் திறந்து வைத்துப் பூஜை நடத்தினார். 16ம் தேதி காலை முதல் பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த பூஜை நாட்களில் தினமும் அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு நிர் மால்ய தரிசனம் பூஜைகளைத் தொடர்ந்து காலை 11.30 மணி வரை நெய் அபிஷேகம் மற்றும் உச்சிக் கால பூஜைக்கு பின் மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. கடந்த டிசம்பர் 26ம் தேதி மண்டல பூஜையும், ஜனவரி 14ம் தேதி மகரவிளக்கு பூஜையும் நடைபெற்றது.

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான மண்டல பூஜைகள் மற்றும் மகரவிளக்‍கு பூஜைகள் நேற்றுடன் நிறைவு பெற்றன. இதையடுத்து இன்று காலை பந்தள மன்னர் பிரதிநிதி ராஜ ராஜ வர்மா, ஐயப்பசாமி கோயிலில் தரிசனம் செய்து பின்னர், நிறைவு பூஜைகள் செய்யப்பட்டு நடை அடைக்கப்பட்டது.

மாசி மாத பூஜைகளுக்காக வரும் பிப்ரவரி 12ம் தேதி மீண்டும் நடை திறக்கப்படும் என தேவசம் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00