கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ நகர் காலனி ஐயப்பன் கோவிலில் திரு ஆபரணப்பெட்டி ஊர்வலம் மற்றும் மகர ஜோதி தரிசனம் நடைபெற்றது

Jan 16 2018 12:11PM
எழுத்தின் அளவு: அ + அ -

சபரி மலை ஐயப்பன் கோவிலில் எவ்வாறு திரு ஆபரணப் பெட்டி ஊர்வலம் மற்றும் மகர ஜோதி தரிசனம் நடைபெறுமோ, அதே போன்று கும்பகோணம் ஸ்ரீ நகர் காலனி ஐயப்பன் கோவிலிலும் ஆண்டுதோறும் திரு ஆபரணப் பெட்டி ஊர்வலம் மற்றும் மகர ஜோதி தரிசனம் நடைபெறும். நேற்று பொங்கல் திருநாளையொட்டி 13 ஆம் ஆண்டாக ஸ்ரீ நகர் காலனி ஐயப்பன் கோவிலில் செண்டை மேளம் ஒலிக்க திரு ஆபரணப் பெட்டி ஊர்வலம் நடைபெற்றது. சரண கோஷங்கள் முழங்க மோகன் சுவாமிகள் திரு ஆபரணப் பெட்டியை ஆடியபடியே ஊர்வலமாக கொண்டு சென்றார். தொடர்ந்து திரு ஆபரணங்கள் ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பின்னர் சபரிமலையில் மகர ஜோதி தரிசனம் நடைபெற்ற அதே நேரத்தில் இங்கும் மகர ஜோதி ஏற்றப்பட்டது. இதனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.

தமிழர் திருநாளாம் தை பொங்கலை முன்னிட்டு, முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஜந்தாவது படை வீடான திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பக்தர்கள் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். முன்னதாக உற்சவர் மற்றும் மூலவருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் செய்யப்பட்டு வழிபாடுகள் நடைபெற்றன. இதையடுத்து, கண்களுக்கு விருந்தாக மாணவ, மாணவிகளின் பரதநாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தூத்துக்குடி சிவன்கோவிலில் தை மாத முதல் சனி பிரதேச வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி, சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றதுடன், நந்திக்கு பால், தயிர், வெண்ணெய், சந்தணம் போன்ற வாசனை திரவியங்களுடன் அபிஷேகம் நடைபெற்றது.

அரியலூரில் பழமைவாய்ந்த அருள்மிகு அருந்தவநாயகி உடனுறை ஆலந்துறையார் திருக்கோவிலில், நந்தியம்பெருமானுக்கு பன்னீர், பால், தேன், சந்தனம், குங்குமம் உள்ளிட்ட சகலவிதமான திரவியங்களால் அபிஷேக ஆராதனையும், தொடர்ந்து சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதேபோன்று பிரசித்திபெற்ற கைலாசநாதர் கோவில் உள்ளிட்ட மாவட்டத்திலுள்ள அனைத்து சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

வேலூர் மாவட்டங்களில் உள்ள சிவன் கோயிலில் பிரதோச விழா நடைபெற்றது. இதன்ஒருபகுதியாக வேலூர் கோட்டையில் மிகப்பழமையான ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷ விழா நடைபெற்றது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00