குற்றங்கள் குறைய காவடி ஏந்தி வேண்டுதல் நிறைவேற்றிய காவல்துறையினர் - மன்னர் கால பாரம்பரிய முறைப்படி கடைப்பிடிப்பு

Dec 16 2017 10:08AM
எழுத்தின் அளவு: அ + அ -

கன்னியாகுமரி மாவட்டத்தில் குற்றங்கள் குறைந்து பொதுமக்கள் அமைதியாக வாழ்வதற்காக காவல் துறையினரும், மழைவளம் பெருகி விவசாயம் செழித்திட பொதுப்பணித்துறையினரும், தக்கலையிலிருந்து வேளிமலை குமார கோவிலுக்கு காவடி பவனி சென்றனர்.

திருவிதாங்கூர் மன்னராட்சி காலத்தில் கடைப்பிடிக்‍கப்பட்ட பாரம்பரிய முறைபடி இப்போதும் தக்கலையில் காவல் நிலையத்தில் போலீசாரும், பொதுபணிதுறை அலுவலகத்தில் ஊழியர்களும் ஆண்டு தோறும் காவடி கட்டி ஊர்வலமாக சென்று வருகின்றனர். அந்தவகையில் கார்த்திகை மாதம் கடைசி வெள்ளிகிழமையை முன்னிட்டு இன்று தக்கலையில் காவல் நிலையத்தில் போலீசார் காவடி கட்டி ஊர்வலமாக வேளிமலை குமாரகோவிலுக்கு சென்றனர். இதைபோன்று பொது பணித்துறையினரும் காவடி கட்டி ஊர்வலமாக சென்றனர். குமரி மாவட்டத்தில் குற்றங்கள் குறைந்து பொதுமக்கள் அமைதியாக வாழ்வதற்காக வேண்டுதலுடன் செல்லும் இந்த காவடி ஊர்வலத்தில், நெற்றிப்பட்டம் அணிந்த யானை முது கும்பம் ஏந்தி முன் செல்ல, காவடியேந்தி காவலர்கள் பின் சென்றனர். இந்நிகழ்ச்சியில், குற்ற ஆவண பிரிவு டிஎஸ்பி மகேந்திரன், பத்மநாபபுரம் குற்றவியல் நீதிபதி முத்துராமன் ஆகியோர் பங்கேற்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00