சபரிமலை ஐயப்பன் கோவிலில் சீசன் தொடக்கம் : கன்னியாகுமரியில் குவியும் ஐயப்ப பக்தர்கள்

Nov 19 2017 5:10PM
எழுத்தின் அளவு: அ + அ -

சபரிமலை ஐயப்பன் கோவிலில் சீசன் தொடங்கியுள்ளதையொட்டி சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் ஐயப்ப பக்‍தர்களின் கூட்டம் அலை மோதி வருகிறது.

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் தினந்தோறும் ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்‍கம். குறிப்பாக கோடை விடுமுறை மற்றும் ஐயப்ப பக்‍தர்கள் சீசன் காலங்களில் இங்கு கூட்டம் அலைமோதும். இந்த ஆண்டு சபரிமலை சீசனையொட்டி கன்னியாகுமரியில் ஏராளமான ஐயப்ப பக்‍தர்கள் குவிந்து வருகின்றனர். அங்குள்ள விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை உள்ளிட்ட பகுதிகளுக்‍கு சென்ற பக்‍தர்கள், முக்‍கடல் சங்கமத்தில் புனித நீராடினர். மேலும் கன்னியாகுமரியில் பிரசித்திபெற்ற சூரிய உதயத்தை கண்ட பக்‍தர்கள் அங்குள்ள பகவதி அம்மன் கோவிலுக்‍கு சென்று தரிசனம் செய்தனர். தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்‍தர்கள் குவிந்துள்ளனர். இதனால் கன்னியாகுமரியில் எங்கு நோக்‍கினும் ஐயப்ப பக்‍தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனையடுத்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00