விநாயகர் சதுர்தி விழாவையொட்டி தருமபுரி மாவட்டத்தில் பலவகையான விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரம்

Aug 18 2017 9:14AM
எழுத்தின் அளவு: அ + அ -

வருகிற 25-ம் தேதி விநாயகர் சதுர்தி விழா கொண்டாடப்படவுள்ளது. இதனையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகள் செய்யப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தருமபுரி மாவட்டம் அதியமான்கோட்டையில், பலவகை மற்றும் வண்ணங்களில் விநாயகர் சிலைகள் செய்யப்பட்டு வருகின்றன. சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் காகிதகூழ், தேங்காய் நார், சாக்பீஸ் பவுடர் போன்றவைகளை கொண்டு சுமார் மூன்று அடி முதல் பத்து அடி வரை விநாயகர் சிலைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இங்கு தயாரிக்கப்படும் சிலைகளை கோவை, சேலம், ஈரோடு, மேட்டூர், தாரமங்கலம், கிருஷ்ணகிரி, பெங்களூரு போன்ற பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் நேரடியாக வாங்கிச் செல்கின்றனர். ஜி.எஸ்.டி வரி விதிப்பின் காரணமாக சிலைகள் தயாரிப்பதற்கு தேவையான மூலப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளதால், விநாயகர் சிலைகளின் விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00