தமிழகத்தின் பல்வேறு கோவில்களில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்தியன் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் : திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்

Jun 22 2017 1:22PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தின் பல்வேறு கோவில்களில், பிரதோஷத்தை முன்னிட்டு நந்தியன்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நந்தியன்பெருமானை வழிபட்டனர்.

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் சுவாமி சன்னதி முன்பு அமைந்துள்ள பெரிய நந்திக்கு பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதில் பெண்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருவாரூர் ஸ்ரீதியாகரா சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற ஆனிமாத பிரதோஷ வழிபாட்டில் ஆயிரக்கணக்கானபக்தர்கள் திரண்டு நந்தியன் பெருமானை வழிபட்டனர். இதனை முன்னிட்டு நந்தி பகவானுக்கு மஞ்சள், பால்,தயிர், பஞ்சாமிர்தம், தேன், சந்தனம் உள்ளிட்ட மங்க பொருட்களைக் கொண்டு மகா அபிஷேகமும், தொடர்ந்து மகா தீபாராதனையும் நடைபெற்றது. இவ்வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்த கொண்டு நந்தியன்பெருமானை வழிபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம், திருவொற்றியூரிலுள்ள பழமைவாய்ந்த அருள்மிகு வடிவுடையம்மன் உடனுறை தியாகராஜ சுவாமிகள் திருக்கோவிலில், வைகாசி மாத பிரதோஷம் மற்றும் கிருத்திகை தினத்தையொட்டி, நந்தீஸ்வரருக்கு, பால், பன்னீர், இளநீர், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட நறுமணப் பொருட்களை கொண்டு அபிஷேகங்கள் செய்யப்பட்டதுடன், அலங்காரங்கள் செய்யப்பட்டு, சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

திருச்சி ஸ்ரீசிவசுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் கிருத்திகையையொட்டி, வெள்ளி ஆபரணங்கள் சூடியபடி வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளிய முருகப்பெருமானுக்கு மகாதீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் திருவீதி உலா எழுந்தருளிய சுவாமியை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷத்தையொட்டி நந்தியம் பெருமானுக்கு சகலவிதமான திரவியங்களால் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து, சுவாமி மற்றும் அம்பாளுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு மேற்கொண்டனர்.

அரியலூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆலந்துறையார் மற்றும் கைலாசநாதர் ஆலயங்களில் நந்தியம்பெருமானுக்கு சகலவிதமான திரவியங்களால் அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இந்த பிரதோஷ வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.

பெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டபுரத்தில் பராந்தக சோழனால் கட்டப்பட்ட ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு வாலீஸ்வரர் ஆலயத்தில், பிரதோஷ வழிபாடு வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் வாலீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரங்களும் மேற்கொள்ளப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00