வலங்கைமான் சீதாளாதேவி மாரியம்மன் கோவிலில் பாடைக்காவடி விழா : ஏராளமானோர் நேர்த்திக்கடன் செலுத்தினர்

Mar 26 2017 5:10PM
எழுத்தின் அளவு: அ + அ -

வலங்கைமான் சீதாளாதேவி மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற பாடைக்காவடி விழாவில் ஏராளமானோர் பங்கேற்று நேர்த்திக்கடனை செலுத்தினர்.

மருத்தவர்களால் கைவிடப்பட்டு உயிருக்கு போராடுபவர்கள் நலம்பெற வேண்டி, திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் எழுந்தருளியுள்ள சீதாளாதேவி மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதாக பிரார்த்தனை செய்துகொள்கின்றனர். பிரார்த்தனை நிறைவேறியவுடன், இறந்தவர்களை பாடையில் எடுத்து செல்வதுபோல, கை கால்களைக் கட்டி, நெற்றியில் காசு வைத்து, பாடையில் படுத்தவாறு ஆலயத்தை வலம்வருகின்றனர். குழந்தைகளுக்கும் தொட்டில் பாடை கட்டி வேண்டுதல் நிறைவேற்றப்படுகிறது. பங்குனி பெருவிழாவின் 2-வது ஞாயிற்றுக்கிழமையான இன்று இந்த பாடைக்காவடி விழா நடைபெற்றது. இதில், தஞ்சை, திருவாரூர், நாகை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர். பாடை காவடி மட்டுமின்றி, அலகுக்காவடி, பால்காவடி மற்றும் அங்கப்பிரதட்சணம் போன்ற நேர்த்திக் கடன்களும் நிறைவேற்றப்பட்டன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00