மகா சிவராத்திரியையொட்டி தமிழகத்தில் உள்ள பல்வேறு சிவாலயங்களில் சிறப்பு பூஜைகள் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் : விடிய விடிய நடைபெற்ற நாட்டியஞ்சலி நிகழ்ச்சிகளை ஏராளமானோர் கண்டு களிப்பு

Feb 25 2017 7:53AM
எழுத்தின் அளவு: அ + அ -

மகா சிவராத்திரியையொட்டி தமிழகத்தில் உள்ள பல்வேறு சிவாலயங்களில் விடிய விடிய நடைபெற்ற சிறப்பு பூஜைகள் மற்றும் நாட்டியஞ்சலி நிகழ்ச்சிகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மகா சிவராத்திரியையொட்டி, திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோயிலில் லட்ச தீப லட்சார்ச்சனை பெருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலில், மகா சிவரத்திரியையொட்டி சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. மேலும், நாட்டின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட நாட்டிய கலைஞர்கள் பங்கேற்ற நாட்டியஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. விடிய விடிய நடைபெற்ற இந்நிகழ்ச்சியை ஏராளமானோர் கண்டு களித்தனர்.

விழுப்புரத்தில் உள்ள கைலாசநாதர் கோயிலில் சுவாமிக்கு, சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டன. பின்னர் ஆயிரத்து 8 சங்குகளை வைத்து சிறப்பு யாக பூஜை நடைபெற்றது. இதனை தொடர்ந்து அரசு இசைப் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற பரத நாட்டியம் மற்றும் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதனை ஏராளமானோர் பார்வையிட்டனர்.

மகா சிவரத்திரியையொட்டி வேலூர் கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. அத்துடன், நாட்டியகுழுவினரின் நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது.

பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் ஆலயத்தில் மகாசிவராத்திரியையொட்டி சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதேபோன்று திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் ஆலயம், மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோயில் உள்ளிட்ட பல்வேறு ஆலயங்களில் நடைபெற்ற மகா சிவராத்திரி வழிபாடுகளில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

பெரம்பலூரில் உள்ள பிரசித்தி பெற்ற பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் சிவபெருமானுக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. வெங்கனூர், வாலிகண்டபுரம், வெங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் உள்ள சிவாலயங்களில் மகா சிவராத்திரி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

ஈரோடு கோட்டை ஆருத்தர கபாலீஸ்வரர் கோயிலில் மகா சிவராத்திரியையொட்டி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மகா சிவராத்திரியையொட்டி பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோவிலில் விடிய விடிய சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் அருகே உள்ள களியன்காடு சிவன்கோவிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மகா சிவராத்திரியையொட்டி நாகை மாவட்டம் மயிலாடுதுறை, திருவெண்காடு ஆகிய பகுதிகளில் உள்ள சிவன்கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மேலும் பரத நாட்டியம், நாடகம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

தூத்துக்குடி சிவன் கோயிலில் 216 சிவலிங்கங்களூக்கு சிவிலிங்க பூஜை நடைபெற்றது. மேலும் குழந்தைகளுக்கு மாறுவேட போட்டி, பரத நாட்டியம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

சைவத் திருத்தலங்களில் முதன்மையான திருவாரூர் தியாகராஜ சுவாமி ஆலயத்தில், மகா சிவராத்திரியையொட்டி, விடிய விடிய நாட்டியஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை, திரளான பக்தர்கள் பார்வையிட்டனர்.

இதேபோல், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள பல்வேறு சிவாலயங்களில் நடைபெற்ற மகா சிவாரத்திரி வழிபாடுகளில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00