மகாசிவராத்திரியை ஒட்டி சிவாலயங்களில் நடைபெறும் சிறப்பு பூஜைகளில் பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்

Feb 24 2017 12:08PM
எழுத்தின் அளவு: அ + அ -

மகாசிவராத்திரியை ஒட்டி சிவாலயங்களில் நடைபெறும் சிறப்பு பூஜைகளில் பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். உத்ரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள டாப்கேஷ்வர் ஆலயத்தில் மஹாதேவரை வணங்கி சிவராத்திரி விரதத்தை தொடங்கினர்.

நாடுமுழுவதும் மகாசிவராத்திரி விழா இன்று சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி பக்தர்கள் கங்கையில் புனித நீராடி சிவராத்திரி விரதத்தை தொடங்கினர். இதனைதொடர்ந்து சிவாலயங்களில் நடைபெறும் சிறப்பு பூஜைகளில் பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதேபோல் உத்ரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள டாப்கேஷ்வர் ஆலயத்தில் ஏராளமான மக்கள் குவிந்துள்ளனர். மஹாபாரத காலத்தில் குரு துரோணாச்சாரியார் இந்த ஆலயத்தில் உள்ள மஹாதேவரை வணங்கி வழிபட்டதாக கூறப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த இத்திருத்தலத்தில் சிறப்பு பூஜைகளை செய்து பக்தர்கள் வணங்கினர். இதேபோல் ஹரித்துவாரில் உள்ள தட்சணேஷ்வர மஹாதேவ ஆலயத்தில் பக்தர்கள் ஏராளமானோர் மகாசிவராத்திரி பூஜைகளில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஜம்மு-காஷ்மீரில் உள்ள ஷிவ்கோரியில் பக்தர்கள் சிறப்பு பூஜைகளில் ஈடுபட்டு சிவபெருமானை வணங்கி வழிபட்டனர். இதேபோல் டெல்லி சாந்தினி சவுக் பகுதியில் உள்ள கவுரி சங்கர் ஆலயத்தில் நடைபெற்ற பூஜைகளிலும் பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00