திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் திருமலையில் அறைகள் பெற ஆதார் அட்டை கட்டாயம் - ஆதார் இல்லையென்றால் அரசால் அங்கீகரிக்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை அவசியம் : திருமலை தேவஸ்தானம் அறிவிப்பு

Oct 26 2016 3:25PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள், திருமலையில் தேவஸ்தான அறைகள் பெற ஆதார் அட்டை கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் இல்லையென்றால் அரசால் அங்கீகரிக்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை அவசியம் என திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலையில் தேவஸ்தான விடுதி அறையில் தங்குவதற்கு முன்பதிவு செய்ய, டெபாசிட் தொகையாக முன்பணம் வாங்கும் முறை கடந்த 19-ம் தேதி முதல் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், பாதுகாப்பு மற்றும் இதர காரணங்களுக்காக திருப்பதியில் தேவஸ்தான அறைகள் பெற ஆதார் அட்டை கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் இல்லையென்றால் அரசால் அங்கீகரிக்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய ஏதுனும் ஒரு அடையாள அட்டை அவசியம் என தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருப்பதியில் அங்கப்பிரதட்சணம் செய்ய கடந்த ஜூலை மாதம் முதல் ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00