முதலமைச்சர் ஜெயலலிதா பூரண உடல்நலம் பெற வேண்டி, தமிழகம் முழுவதும் உள்ள கோயில்கள், தேவாலயங்கள் மற்றும் பள்ளிவாசல்களில் சிறப்பு வழிபாடுகள் : ஆயிரக்கணக்கான அ.இ.அ.தி.மு.க.வினர், பொதுமக்கள் மனமுருக பிரார்த்தனை

Oct 25 2016 4:12PM
எழுத்தின் அளவு: அ + அ -

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா பூரண உடல்நலம் பெற வேண்டி, தமிழகம் முழுவதும் உள்ள ஆலயங்கள், தேவாலயங்கள் மற்றும் பள்ளிவாசல்களில் சிறப்பு வழிபாடுகளும், பிரார்த்தனைகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஆயிரக்கணக்கான அ.இ.அ.தி.மு.க.வினர் மட்டுமின்றி பொதுமக்களும் மனமுருக பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர்.

வடசென்னை வடக்கு மாவட்ட அ.இ.அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்பத்துறை சார்பில், கொடுங்கையூரில் உள்ள Don bosco ஆதரவற்றோர் இல்லத்தில் சிறப்பு பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் அன்னதானமும் வழங்கப்பட்டது. இதில் கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

வடசென்னை தெற்கு மாவட்டக்கழகம் சார்பில், தங்கசாலையிலுள்ள ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் மிருத்திஞ்சயயாகம், ஆயுஷ்ஹோமம் நடைபெற்றது. ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

தென்சென்னை வடக்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி சார்பில், 136வது வட்டத்திலுள்ள தி.நகர் பகுதியிலுள்ள முப்பாத்தாம்மன் கோயிலில் இன்று காலை முதல் உச்சிகால பூஜை வரை அம்மனுக்கு பட்டுசார்த்தி, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தென்சென்னை தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்பப்பிரிவு சார்பில், சென்னை சின்னமலையில் உள்ள கருணை இல்லத்தில் பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டு, அங்கிருந்தவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.

தென்சென்னை தெற்கு மாவட்டக்கழகம் சார்பில், சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் கணபதி ஹோமம், மிருத்யுஞ்ஜய ஹோமம், ஆயுஷ் ஹோமம் நடைபெற்றன. அன்னதானமும் வழங்கப்பட்டது.

திருவள்ளூர் கிழக்கு மாவட்டக் கழகம் சார்பில், அம்பத்தூரை அடுத்த பாடியிலுள்ள திருவல்லீஸ்வரர் திருகோவிலில், மகம் நட்சத்திர தினமான இன்று கணபதி ஹோமம், நவகிரக சாந்தி ஹோமம், மிருத்தியுஞ்சய ஹோமம், சுதர்சன ஹோமம், ஆயுஸ்ய ஹோமம், தன்வந்திரி ஹோமம் உள்ளிட்ட ஹோமங்கள் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்டு தீபாராதனையுடன் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழகம் சார்பில், சோழவரத்தை அடுத்த வடவேற்காடு கிராமத்திலுள்ள தேவி கருமாரியம்மன் கோவிலில் வீற்றிருக்கும் பிரித்தியங்கரா தேவி, ஸ்ரீ நரசிம்மர், ஸ்ரீ வராகியம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு, வழிபாடுகள் நடைபெற்றன.

திருவள்ளூர் கிழக்கு மாவட்டக்கழகம் சார்பில் மணலி அடுத்த பெரியதோப்பு பகுதியிலுள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் இருந்து 351 பேர் பால்குடம் எடுத்து சின்னமாத்தூரில் உள்ள வரசித்தி விநாயகர் கோயிலுக்கு ஊர்வலமாக வந்து பாலாபிஷேகம் செய்து வழிபாடு நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரம் கிழக்கு பகுதியில் உள்ள அருள்மிகு அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயிலில் தன்வந்தரி ஹோமம், ஆயுஷ்ஹோமம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து அன்னதானமும் வழங்கப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம் கழக மீனவர் பிரிவு சார்பில், நீலாங்கரை அருள்மிகு நீலகண்டேஸ்வரர் கோயிலில் தன்வந்தரி ஹோமம், ஆயுஷ்ஹோமம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து அன்னதானமும் வழங்கப்பட்டது.

காஞ்சிபுரம் மேற்கு மாவட்டக்கழகம் சார்பில், மணிகண்டீஸ்வரர் திருக்கோயில் மற்றும் ஏனாத்தூர் அருள்மிகு எல்லையம்மன் திருக்கோயிலில் தன்வந்தரி ஹோமம், ஆயுஷ்ஹோமம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து அன்னதானமும் வழங்கப்பட்டது.

காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி சார்பில், வாலாஜாபாத்தை அடுத்த கட்டவாக்கம் லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயிலில் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து அன்னதானமும் வழங்கப்பட்டது.

காஞ்சிபுரம் மத்திய மாவட்டக்கழகம் சார்பில், சிங்கப்பெருமாள் கோயில் பகுதியில் அமைந்துள்ள நரசிங்கபெருமாள் கோயிலில் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து அன்னதானமும் வழங்கப்பட்டது.

கரூர் மாவட்ட தகவல் தொழில்நுட்பப்பிரிவு சார்பில், வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து, அன்புக்கரங்கள் இல்லத்தில் சிறப்பு பிரார்தனை நடைபெற்றது. மாவட்டக்கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

ஈரோடு புறநகர் மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகர கழகம் சார்பில் பாரியூரில் உள்ள அருள்மிகு நரசிம்ம பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு மகம் நட்சத்திரத்தில் சிறப்பு அர்ச்சனையும் 108 நெய் தீபம் ஏற்றி வழிபாடும் செய்யப்பட்டு, அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்ட கழக தொழில்நுட்ப பிரிவு சார்பில், எட்டையபுரம் எட்டிஸ்வரர் கோயிலில் சிறப்பு யாகம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் இல்லத்தில் பிரார்தனையும், அன்னதானமும் வழங்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டக்கழகம் சார்பில், சிவன்கோயிலில் மிருத்தியுஞ்சய ஹோமம், ஆயுஸ்ய ஹோமம் நடைபெற்றது.

மதுரை புறநகர் மாவட்டக்கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில், பசுமலை பகுதியில் உள்ள சி.எஸ்.ஐ பள்ளியில் உள்ள சிறார் விடுதியில் கூட்டுப்பிரார்தனை நடத்தப்பட்டு, அன்னதானம் வழங்கப்பட்டது.

திருநெல்வேலி மாநகர் மாவட்டக்கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில், மனவளர்ச்சி குறைந்தோர் பள்ளியில் சிறப்பு பிரார்தனைகள் நடைபெற்றது.

திருநெல்வேலி புறநகர் மாவட்டக்கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில், தென்காசி அருகேயுள்ள ஆயக்குடியில் உள்ள அமர்சேவா சங்கத்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் பாட்டு பாடி பிரார்தனை நடத்தினர். மாணவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள திரிபுராந்தீசுவரர் கோயிலில் கணபதி ஹோமம், மிருத்துஞ்சய ஹோமம் நடைபெற்றது. கழக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

திருச்சி மாநகர் மாவட்ட அ.இ.அ.தி.மு.க சார்பில், காவிரியாற்றங்கரை ஓடத்துறையில் உள்ள பழமைவாய்ந்த ஆற்றழகிய சிங்கபெருமாள் ஆலயத்தில், பெருமாள், தாயார், அனுமாருக்கு சிறப்பு அபிஷேகமும், பூஜையும் நடைபெற்றன. "அம்மா" என்ற எழுத்து வடிவில் அகல் விளக்கேற்றி வழிபாடு நடைபெற்றது. அமைச்சர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

திருச்சி மாநகர் மாவட்டக்கழகம் சார்பில், உறையூர் பஞ்சவர்ணேஸ்வரர் ஆலயத்தில் மிருத்துஞ்சய யாகம், தன்வந்தரி ஹோமம் நடத்தி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

திருச்சி புறநகர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி சார்பில், மணப்பாறையில் உள்ள பெருமாள் ஆலயத்தில் யோக நரசிம்மருக்கு பல்வேறு திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

புதுக்கோட்டை மாவட்டக்கழகம் சார்பில், புவனேஷ்வரி அம்மன் ஆலயத்தில் மகாசப்த த்ராந்ய ருத்யுந்திய யாக பூஜை நடைபெற்று வருகிறது. சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன.

விருதுநகர் மாவட்டக்கழகம் சார்பில், சிவகாசி சிவன் கோயிலில் மகா மிருத்துஞ்சய ஹோமம், ஆயுஷ்யஹோமம் நடைபெற்றது.

திருப்பூர் மாநகர் மாவட்ட கழக தகவல் தொழில் நுட்ப பிரிவு சார்பில், அவினாசி அருகே கோதபாளையம் பகுதியில் உள்ள காது கேளாதோர் பள்ளியில் பயிலும் 250- குழந்தைகள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி கூட்டு பிரார்தனையில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து குழந்தைகளுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

திருப்பூர் புறநகர் மாவட்ட கழக தகவல் தொழில்நுட்ப பிரிவுசார்பில், உடுமலை, கொங்கல் நகரம் பகுதியில் உள்ள அன்பு இல்லத்தில் உள்ளஉடல் ஊனமுற்றோர், காது கேளாதோர் குழந்தைகள் கூட்டு பிரார்தனையில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து குழந்தைகளுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

திருப்பூர் புறநகர் மாவட்ட கழகம் சார்பில், மகம் நட்சத்திரத்தையொட்டி, உடுமலை ஏரிப்பாளையம் பகுதியில் உள்ள அருள்மிகு சித்தாண்டீஸ்வரர் ஆலயத்தில் கணபதிஹோமம், மிருத்துஞ்சய ஹோமம், ஆயுஷ்ஹோமம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து ஈஸ்வரருக்கு மகாதீபாராதனையும் நடைபெற்றது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் ஒன்றியக்கழகம் சார்பில், வாலீஸ்வரர் திருக்கோயிலில் சிறப்பு யாகபூஜைகள் நடைபெற்றன. ஏராளமான கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

விழுப்புரம் வடக்கு மாவட்டக்கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில், பானாம்பட்டில் உள்ள ஆதரவற்ற முதியோர் மற்றும் குழந்தைகள் காப்பகத்தில் மெழுகு வர்த்தி ஏந்தி சிறப்பு பிரார்தனை நடத்தினர்.

ஈரோடு புறநகர் மாவட்டக்கழகம் சார்பில் பவானி சங்கமேஸ்வரர் கோயிலில் ஸ்ரீலட்சுமி நரசிம்மருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. அமைச்சர், கழக நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்று முதலமைச்சருக்காக பிரார்த்தனை மேற்கொண்டனர்.

ஈரோடு மாநகர் மாவட்டக்கழகம் சார்பில் கோட்டை ஈஸ்வரன் கோயிலில் 108 மூலிகைகளைக் கொண்டு கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மிருத்துஞ்சய ஹோமம் நடைபெற்றது. ஏராளமான கழக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த முடசல்ஓடையில் 108 பெண்கள் பால்குடம் ஏந்தி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று ஸ்ரீமுருகன் கோயிலில் பாலாபிஷேகம் செய்து திருவிளக்கு பூஜை நடத்தினர். அன்னதானமும் வழங்கப்பட்டது. மீனவ மக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

கடலூர் மேற்கு மாவட்டக்கழகம் சார்பில், திட்டக்குடி வைத்தியநாதசுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

தஞ்சை வடக்கு மாவட்டக்கழக தகவல்தொழில்நுட்பப் பிரிவு சார்பில், கும்பகோணத்திலுள்ள அன்னை கருணை இல்லத்தில் மாணவர்களுக்கும், முதியோர்களுக்கும் சிறப்பு பிரார்தனை நடத்தினர். அவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது.

பெரம்பலூர் மாவட்ட கழக தகவல்தொழில்நுட்ப பிரிவு சார்பில், துறைமங்கலத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் காப்பகத்தில் சிறப்பு கூட்டுப்பிரார்தனை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டக்கழகம் சார்பில், காலகஸ்தி ஞானஅம்பிகை ஆலயத்தில் சுதர்சனயாகம் மற்றும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. 54 பரிகார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகளும் செய்து வழிபாடு நடத்தினர்.

திண்டுக்கல் மாவட்ட கழக தகவல் தொழில்நுட்பப்பிரிவு சார்பில், நந்தவனப்பட்டியில் உள்ள அன்பரசி ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் மும்மத கூட்டுப்பிரார்த்தனை மற்றும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. காப்பகத்தில் உள்ள மாணவ, மாணவிகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

கன்னியாகுமரி மாவட்டக்கழகம் சார்பில், மேக்காமண்டபம் மனநலம் குன்றியோர் இல்லத்தில் சிறப்பு பிரார்தனை நடத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து உணவு வழங்கப்பட்டது.

நாகை மாவட்டம் சீர்காழியில் உள்ள பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் தன்வந்தரியாகம், ஆயுஷ்ஹோமம் நடைபெற்றது. பின்னர் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. ஏராளமானோர் பங்கேற்றனர்.

நாகை மாவட்டக்கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில், மயிலாடுதுறையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் காப்பகத்தில் கூட்டுப்பிரார்தனை நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

சிவகங்கை மாவட்டக்கழகம் சார்பில், காளையார்கோவிலிலுள்ள சோமேஸ்வரர் ஆலயத்தில் ருத்ரயாகம், மகாயாகம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

ராமநாதபுரத்தில் உள்ள செஸ்ட்ஏஞ்சலின் மூளைவளர்ச்சி குன்றியோர் இல்லத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. பின்னர் காலை உணவு வழங்கப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

தஞ்சை தெற்கு மாவட்ட கழகம் சார்பில், ஆனந்தவல்லி சமேத தஞ்சைபுரீஸ்வரர் ஆலயத்தில் தன்வந்தரியாகம், ஆயுஷ்ஹோமம் நடத்தப்பட்டது. பின்னர் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனையும் நடைபெற்றன.

கோவை புறநகர் மாவட்ட கழகம் சார்பில், அவினாசி சாலையில் உள்ள இஸ்கான் கிருஷ்ணன் கோயிலில், தீப வழிபாடும், அரசூர் மாரியம்மன் கோயிலில் மகா யாகம் மற்றும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா பூரண நலம் பெற வேண்டி, அப்பல்லோ மருத்துவமனை நுழைவு வாயிலில் காளிகாம்பாள் பூஜை நடைபெற்றது. இதில் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

திண்டுக்கல் மாவட்ட கழக தகவல் தொழில்நுட்பப்பிரிவு சார்பில், நந்தவனப்பட்டியில் உள்ள அன்பரசி ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் மும்மத கூட்டுப்பிரார்த்தனை மற்றும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. காப்பகத்தில் உள்ள 150 மாணவ, மாணவிகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

திருவள்ளூர் கிழக்கு மாவட்டக்கழகம் சார்பில் மணலி அடுத்த பெரியதோப்பு பகுதியிலுள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் இருந்து 351 பேர் பால்குடம் எடுத்து சின்னமாத்தூரில் உள்ள வரசித்தி விநாயகர் கோயிலுக்கு ஊர்வலமாக வந்து பாலாபிஷேகம் செய்து வழிபாடு நடைபெற்றது.

திருவள்ளூர் மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்பப்பிரிவு சார்பில் பாக்கம் கிராமத்திலுள்ள ஆதரவற்றோர் விடுதியில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவியர் சிறப்பு கூட்டு பிரார்த்தனை செய்தனர்.

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், திருவொற்றியூர் பகுதிக்கழகம் சார்பில் சுங்கச்சாவடி பகுதியில் உள்ள தண்டுமாரியம்மன் கோயிலில் இருந்து 508 பேர் பால்குடம் எடுத்து வடிவுடையம்மன் கோயிலுக்கு ஊர்வலமாக வந்து பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர்.

காஞ்சிபுரம் மத்திய மாவட்டக்கழகம் சார்பில் திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயிலில் பல்வேறு ஹோமங்கள் நடத்தப்பட்டு சிறப்பு பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டது. சிறப்பு அபிஷேக ஆராதனைகளைத் தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

கரூர் மாவட்டக்கழகம் சார்பில் கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலில் 108 மூலிகைப் பொருட்களைக் கொண்டு ஸ்ரீசுத்த யாகம், மிருத்யுஞ்ஜய யாகம், சுதர்சன யாகம், ஆயுஷ் யாகம், தன்வந்திரி யாகம் நடத்தப்பட்டது.

திருவாரூர் மாவட்டக்கழகம் சார்பில், மகம் நட்சத்திர தினத்தையொட்டி, மகம் நட்சத்திரம் பிறந்த ஊராக கருதப்படும் வலங்கைமான் ஒன்றியம் நல்லூர் பகுதியில் அருள்பாலிக்கும் ஸ்ரீகல்யாணசுந்தரேஸ்வரர் ஆலயத்தில் 108 வகையான பொருட்கள் கொண்டு சிறப்பு யாகம் நடைபெற்றது. அதனைதொடர்ந்து மகாஅபிஷேகம், கலசாபிஷேகமும் நடைபெற்றது.

மதுரை புறநகர் மாவட்டக்கழகம் சார்பில், திருப்பரங்குன்றம் சொக்கநாதர் கோயிலில் 10 ஆயிரம் வேத மந்திரங்கள் முழங்க மகாமிருத்துஞ்சய யாகம், ஆவர்த்திஜபம் நடத்தப்பட்டது. ஆயிரத்து 8 மூலிகைகளை கொண்டு ஆவர்த்தி ஹோமமும், ஆயுஷ்யஹோமமும் நடத்தப்பட்டு, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்ட்டது.

மதுரை மாநகர் மாவட்டக்கழகம் சார்பில், செல்லூர் பகுதியில் உள்ள திருவாப்பனுநாதர் கோயிலில் 10 ஆயிரம் வேத மந்திரங்கள் முழங்க மகாமிருத்துஞ்சய யாகம், ஆவர்த்திஜபம் நடத்தப்பட்டது. ஆயிரத்து 8 மூலிகைகளை கொண்டு ஆவர்த்தி ஹோமமும், ஆயுஷ்யஹோமமும் நடத்தப்பட்டு, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

கோவை மாநகர் மாவட்டக்கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில், பீளமேடு பகுதியில் உள்ள, அரவணைக்கும் அன்பு இல்லத்தில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் காலை உணவு வழங்கப்பட்டது.

நாகை மாவட்டம் சீர்காழியை சுற்றியுள்ள உக்கிரநரசிம்மர், வீர நரசிம்மர், யோக நரசிம்மர், ஹிரண்யநரசிம்மர், லட்சுமி நரசிம்மர் ஆலயங்களில் சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது.

கடலூர் சிங்குரிகுடி ஸ்ரீலட்சுமி நரசிம்மர் கோயிலில் சகஸ்ரநாம அர்ச்சனை செய்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதேபோல், நல்லாத்தூர் சொர்ணபுரி ஆலயத்தில் மிருத்யுஞ்ஜய ஹோமம், ஆயுஷ்ஹோமம் நடைபெற்றது.

கடலூர் திருமானிக்குழி, வாமனபுரீஸ்வரர் கோயிலில் மிருத்யுஞ்ஜய ஹோமம், ஆயுஷ் ஹோமம் நடைபெற்றது. கழக நிர்வாகிகள் கலந்துகொண்டு மனமுருக பிரார்த்தனை செய்தனர்.

கடலூர் கிழக்கு மாவட்டம் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள அருள்மிகு பாடலீஸ்வரர் ஆலயத்தில் மிருத்யுஞ்ஜய ஹோமம், ஆயுஷ் ஹோமம் நடைபெற்றது.

ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கழகம் சார்பில், சாலமங்கலம் கற்பக விநாயகர் கோயிலில் இருந்து ஓசூரம்மன் கோயிலுக்கு 108 பெண்கள் பால்குடம் சுமந்து ஊர்வலமாகச் சென்று பாலாபிஷேகம் நடத்தி சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டனர்.

தேனி மாவட்டக்கழகம் சார்பில், போடி நாயக்கனூரில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற மகாமிருத்துஞ்சய ஹோமம், தன்வந்தரி மகாயாகம் உள்ளிட்ட சிறப்பு யாகங்கள் நடைபெற்றன. இந்த வழிபாட்டு நிகழ்ச்சியில் 108 பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜையும் நடைபெற்றது.

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா பூரண நலம் பெற வேண்டி, கேரளா மாநிலம் ஆராட்டுப்புழாவில் குரு மகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் தலைமையில் ஸ்ரீசீரடி சாய்பாபா திருக்கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00