சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு தரிசனம் ஆகியவற்றில் பங்கேற்கும் பக்தர்களின் வசதிக்காக இணையதள முன்பதிவு தொடக்கம்

Oct 23 2016 5:57PM
எழுத்தின் அளவு: அ + அ -

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு தரிசனம் ஆகியவற்றில் பங்கேற்கும் பக்தர்களின் வசதிக்காக இணையதள முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில், மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு தரிசனத்தின்போது, பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும். சில சமயங்களில் சுவாமி தரிசனம் செய்யமுடியாமல் திரும்பிச் செல்லும் நிலையும் ஏற்படுகிறது. இதனை தவிர்ப்பதற்காக கேரள காவல்துறை சார்பில் இலவச இணையதள முன்பதிவு கடந்த 2011ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்படுகிறது.

இந்நிலையில், வரும் 15ம் தேதி தொடங்கவுள்ள மண்டலபூஜையில் கலந்துகொள்ளும் பக்தர்களின் வசதிக்காக, வரும் 16ம் தேதி முதல் இணையதள முன்பதிவு தொடங்குகிறது. இதற்கான http:www.sabarimalaq.com என்ற இணையதள முகவரியில் பக்தர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த இணையதளத்தில் பக்தர்கள் தங்களுடைய பெயர், முகவரியோடு புகைப்படத்தையும் பதிவுசெய்யவேண்டும். பதிவிறக்கம் செய்யப்பட்ட கூப்பன், புகைப்படம் மற்றும் ஏதாவது ஒரு அடையாள அட்டை ஆகியவற்றுடன் பம்பை செல்லவேண்டும். அங்கு அமைக்கப்பட்டுள்ள சிறப்பு கவுண்டரில் கூப்பன் மற்றும் அடையாள அட்டை பரிசோதிக்கப்பட்ட பின்னர், மலையேறுவதற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இந்த இணையதள முன்பதிவு வசதி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 11ம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00