நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பொன்வரதராஜப் பெருமாள் கோயிலில் நடைபெற்ற மாடு தாண்டும் நிகழ்ச்சி : ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்

Sep 25 2016 12:52PM
எழுத்தின் அளவு: அ + அ -

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள பொன்வரதராஜப் பெருமாள் கோயிலில் நடைபெற்ற மாடு தாண்டும் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.

ராசிபுரத்தில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற பொன்வரதராஜப் பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத 2வது சனிக்கிழமையை முன்னிட்டு பக்தர்கள் இந்த நேர்த்திக் கடனை நிறைவேற்றினர். கோயில் வளாகத்தில் பக்தர்கள் வரிசையாக படுக்கவைக்கப்பட்டு, அவர்களை மாடுகள் தாண்டிச் சென்றன. இதற்காக, சேலம் மாவட்டம் கொங்கனாபுரம், ஓமலூர் பகுதியில் இருந்து மாடுகள் வரவழைக்கப்பட்டன. திருமண தடை நீங்குதல், குழந்தை பாக்கியம், கல்வி மேம்பாடு போன்ற வேண்டுதலுக்காக இத்தகைய நேர்த்திக் கடனை நிறைவேற்றுவதாக பக்தர்கள் தெரிவித்தனர்.

இதனிடையே, கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டம் புனித தோமையார் தேவாலயத்தில் 10 நாட்கள் கொண்டாடப்படும் ஆண்டுத் திருவிழா, கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைமுன்னிட்டு திருப்பலியும், நற்கருணை ஆராதனையும் நடைபெற்றன. இந் நிகழ்ச்சியில், கடலோர கிராம மக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00