தமிழகத்தின் பல்வேறு ஆலயங்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளில் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்

Aug 23 2016 6:33AM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தின் பல்வேறு ஆலயங்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளில் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தஞ்சாவூர் முனிசிபல் காலனி, அருள்மிகு சக்தி விநாயகர் ஆலயத்தின் 22-ம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி, முழுமுதற் கடவுளான ஸ்ரீ சக்தி விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு, சம்வஸ்தராவிசேஷ ஆராதனை நேற்று நடைபெற்றது. மாலையில் சந்தனக் காப்பு அலங்காரமும், இரவு வீதியுலாவும் நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை பொன் வரதராஜ பெருமாள் கோயில் குடமுழக்கு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதனைதொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடத்தப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல், புதுக்கோட்டை ஆயியம்மன் மற்றும் திருமலைச்சி அம்மன் கோயில்களின் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

அரியலூர் திரெளபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, தீ மிதித்து தங்களின் நேர்த்திக் கடனை செலுத்தினர்.

கிருஷ்ணகிரி விண்ணரசி மாதா ஆலய தேரோட்ட திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. வண்ண விளக்குகளாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளிய மாதா, நகரின் முக்கிய வீதிகள் வழியாக பவனி சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00