தமிழகத்தில் உள்ள பிரசித்திபெற்ற ஆலயங்களில் ஆடிப்பூர விழா, கொடியேற்றத்துடன் தொடங்கியது : ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்

Jul 28 2016 10:45AM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தில் உள்ள பிரசித்திபெற்ற ஆலயங்களில் ஆடிப்பூர விழா, கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.

திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி கோயிலில் உள்ள ஸ்ரீகமலாம்பிகை அம்மன் ஆலயத்தில், ஆடிப்பூரவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இவ்விழா, நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. இதனையொட்டி, ஆலயத்தில் இருந்து உற்சவ மூர்த்திகளின் வீதியுலா நடைபெற்றது. பின்னர், கொடிமரத்தில் வீற்றிருக்கும் விநாயகர், சுப்பிரமணியர் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் யாக வேள்விகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, 64 அடி உயர கொடிமரத்தில் உற்சவ கொடி ஏற்றப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.

தஞ்சை மாவட்டம் திருவையாறு பஞ்சநதீஸ்வரர் ஆலயத்திலும் ஆடிப்பூர மகோற்சவ விழா, கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. விழாவின் ஒருபகுதியாக, வரும் 2ம் தேதி தீர்த்தவாரியும், தேவார இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் பவனி, வரும் 4-ம் தேதி நடைபெறவுள்ளது.

திருச்சி திருவாணைக்காவல் ஜம்புகேசுவரர் அகிலாண்டேஸ்வரி ஆலயத்தில் ஆடிபூர தெப்பத் திருவிழா, கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியுள்ளது. இதனையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் 12ம் நாள், ஆடிப்பூரகுளத்தில் தெப்பஉற்சவம் நடைபெறவுள்ளது.

இதனிடையே, நெல்லை மாவட்டம் தெற்குகள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா பேராலயத்தில், 131வது ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் கோலாலகமாக தொடங்கியுள்ளது. இதில், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் கேரளாவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி வரும் 4-ம் தேதி நடைபெறுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00