தமிகழத்தின் பல்வேறு கோவில்களில் ஆடி மாத திருவிழாவையொட்டி பூக்கூடை ஊர்வலம், தீமித் திருவிழா, புனிதநீர் ஊர்வலம், சிறப்பு யாகம், மஹா தீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன

Jul 27 2016 7:46AM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிகழத்தின் பல்வேறு கோவில்களில் ஆடி மாத திருவிழாவையொட்டி பூக்கூடை ஊர்வலம், தீமித் திருவிழா, புனிதநீர் ஊர்வலம், சிறப்பு யாகம், மஹா தீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்வுகளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விரதமிருந்து பங்கேற்று மனமுருக சுவாமி தரிசனம் செய்தனர்.

சேலம் மாநகர கோட்டை மாரியம்மன் கோவில் ஆடி திருவிழாவையொட்டி, கடந்த 11-ம் தேதி கோவிலில் முகூர்த்த கால் நடப்பட்டது. இதனை தொடர்ந்து சேலம் மாநகரில் உள்ள எட்டு மாரியம்மன் கோயில்களிலும் நேற்று ஆடிப் பண்டிகை தொடங்கியது. இதனையொட்டி சேலம் கிச்சிபாளையம் சின்ன மாரியம்மன் கோவிலிலிருந்து பூக்கூடை ஊர்வலம் தொடங்கி, முக்கிய வீதிகள் வழியாக கோட்டை மாரியம்மன் கோவிலை வந்தடைந்தது. இதனை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் விஷேச பூஜைகள் நடைபெற்றன. பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானமும் வழங்கபட்டது. விழாவில் ஆயிரகணக்கானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

நாகை மாவட்டம் மங்கைநல்லூரை அடுத்த பொரும்பூரில் அமைந்துள்ள ஸ்ரீசெல்லியம்மன் ஆலய ஆடித்திருவிழா காப்புக் கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு, அருகில் உள்ள ஆட்டூரில் அமைந்துள்ள மங்கள மாரியம்மன், பொரும்பூருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. 136ம் ஆண்டு ஆடித்திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனைகளும் நடைபெற்றன. தொடரந்து மஹா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

வேதாரண்யம் அருகே தேத்தாக்குடி தெற்கில் அமைந்துள்ள காமாட்சியம்மன் மற்றும் காளியம்மன் கோவிலில் திருவிழாவையொட்டி தீமிதித் திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் மஞ்சள் ஆடை அணிந்து விரதமிருந்து தீ குண்டத்தில் இறங்கி நேர்த்திக் கடன் செலுத்தினர். தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி மஞ்சள் விளையாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

வேளாங்கண்ணியை அடுத்த தெற்குபொய்கைநல்லூரில் அந்தோணியார் ஆலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக ஜெபமாலை, சிறப்புத்திருப்பலி, கூட்டுப்பாடல் பிரார்த்தனை செய்யப்பட்டு புனிதம் செய்யப்பட்ட கொடி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு ஆலயத்தின் முன்பு உள்ள கொடி மரத்தில் ஏற்றப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அந்தோனியார் பெரியதேர்பவனி 6ம் தேதி நடைபெறுகிறது.

திருவண்ணாமலை மாவட்டம் அருள்மிகு ஸ்ரீபச்சையம்மன் திருக்கோயிலில் நடைபெற்ற தீமிதித் திருவிழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் மஞ்சள் ஆடை அணிந்து தீமிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு பச்சையம்மனை வழிபட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம் முப்பந்தல் அருள்மிகு ஸ்ரீ ஆலமுடு அம்மன் கோவிலில் ஆடி மாத பூக்குழி கொடை விழா தொடங்கியுள்ளது. 3 நாட்கள் நடைபெற்றும் இத்திருவிழாவில், முக்கிய நிகழ்வான புனித நீர் எடுத்துவரும் பிரம்மாண்ட ஊர்வலம் நேற்று நடைபெற்றது. ஆரல்வாய்மொழி பிள்ளையார் கோவிலில் உள்ள அகலிகை ஊற்றிலிருந்து புனிதநீர் எடுத்து, நெற்றிப் பட்டம் சூடிய 11 யானைகள் ஊர்வலமாக வர, ஏராளமான பெண்கள் முளைப்பாத்தி மற்றும் அபிஷேகக் குடங்கள் எடுத்து, பறக்கும் காவடி, பால் காவடி உள்ளிட்ட மேலதாளங்களுடன் பிரம்மாண்ட ஊர்வலம் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் நடைபெற்றது.

காரைக்காலை அடுத்த நித்திஸ்வரத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீநித்தியக்கல்யாணி சமேத ஸ்ரீநித்திஸ்வரர் சுவாமி ஆலயத்தில் தேய்பிறை அஷ்டமியான நேற்றிரவு ஸ்ரீபைரவி உடனுறை காலபைரவருக்கு சிறப்பு யாகம் மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதனையடுத்து, ஸ்ரீஸ்வர்ணாகர்ஷண பைரவருக்கு சிறப்பு யாகம் நடைபெற்றது. தொடர்ந்து விபூதி காப்பு அலங்காரமும், ஸ்ரீபைரவருக்கு சகஸ்ரநாம அர்சனையும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவரை வழிபட்டனர்.

இதேபோல், காரைக்காலை அடுத்த பிள்ளைத்தெருவாசல் கிராமத்தில் அமைந்துள்ள, புனித சந்தன மாதா ஆலய ஆண்டுத் திருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வான சந்தன மாதா மின் அலங்கார தேர் பவனி நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. தேர்பவனியை முன்னிட்டு, சிறப்பு திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து சந்தன மாதா மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் பவனி வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்று மெழுகுவர்த்தி ஏந்தி புனித சந்தன மாதாவை வழிபட்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00