நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் அமைந்துள்ள பழமைவாய்ந்த மகா மாரியம்மன் ஆலய கும்பாபிஷேகம் : திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்

May 26 2016 10:57AM
எழுத்தின் அளவு: அ + அ -

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் அமைந்துள்ள பழமைவாய்ந்த மகா மாரியம்மன் ஆலய கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.

மயிலாடுதுறையில் அமைந்துள்ள தொன்மையான கள்ளக்குறிச்சி மகா மாரியம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு யாகசாலைகள் அமைக்கப்பட்டு 4 கால பூஜைகள் நடைபெற்றன. இதனைத்தொடர்ந்து, மகா தீபாராதனை செய்யப்பட்டு கடம்புறப்பாடு நடைபெற்றது. பின்னர் ராஜகோபுரம், கருவறை கோபுரம், விநாயகர், முருகன் சன்னதி உள்ளிட்ட கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் இதில் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.

வேதாரண்யம் அருகேயுள்ள குரவப்புலம் அங்காளம்மன் கோயில் ஆண்டு பெருவிழாவையொட்டி, வண்ண மலர்களால் அம்மன் அலங்கரிக்கப்பட்டு, மஞ்சள் நீர் ஊற்றி வழிபாடு நடத்தப்பட்டது. இதில் கலந்துகொண்ட பக்தர்கள் ஒருவர் மீது ஒருவர் மஞ்சள்நீர் ஊற்றி அம்மனை வழிபட்டனர். மேலும், பக்தர்கள் பால்குடம் எடுத்தும், மாவிளக்கு போட்டும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

திருப்பூண்டியை அடுத்த கருங்கன்னியில் உள்ள பழமைவாய்ந்த புனித அந்தோணியார் ஆலயத்தின் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. முன்னதாக ஆலய வளாகத்தில் இருந்து துவங்கிய கொடி ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்து அடைந்தது. ஆலய பங்குத்தந்தை செல்வன் செபாஸ்டியன் சிறப்பு திருப்பலி செய்து வைத்தார். இதனைத்தொடர்ந்து, கொடி புனிதம் செய்யப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது. இதனையொட்டி, கண்கவர் வாணவேடிக்கை இடம் பெற்றது. வரும் 4-ம் தேதி பெரிய அலங்கார தேர் பவனி நடைபெறவுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00