முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை யொட்டி, ஜெ ஜெயலலிதா பேரவை சார்பில், திருக்கோயில்களில் படிபூஜை செய்தும், வெள்ளித்தேர் இழுத்தும் வழிபாடு

Feb 6 2016 8:03AM
எழுத்தின் அளவு: அ + அ -

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் பிறந்தநாளை யொட்டி, ஜெ ஜெயலலிதா பேரவை சார்பில், திருக்கோயில்களில் படிபூஜை செய்தும், வெள்ளித்தேர் இழுத்தும் வழிபாடு நடத்தப்பட்டது.

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் 68-வது பிறந்தநாளை யொட்டி, தென்பழனி என அழைக்கப்படும் பெரம்பலூர் செட்டிக்குளம் பாலதண்டாயுதபாணி திருக்கோயிலில், மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவை சார்பில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா நீண்ட ஆயுளுடன் நிரந்தர கழகப் பொதுச் செயலாளராகவும், முதலமைச்சராகவும் வேண்டி, மலைக்கோயில் உள்ள 250 படிகளில் படிபூஜை நடத்தப்பட்டது. மேலும், வெள்ளித்தேர் இழுத்தும் வழிபாடு மேற்கொள்ளப்பட்டது. இதில், நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சந்திரகாசி, சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதனிடையே, திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட திருமீயச்சூர் ஸ்ரீலலிதாம்பிகா சமேத ஸ்ரீமேகநாதசுவாமி ஆலயத்தில், வரும் 14ம் தேதி நடைபெறவுள்ள ரத ஸப்தமியை முன்னிட்டு 10 நாட்கள் நடைபெறும் பிரம்மோத்ஸவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடிமரத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு, வேத மந்திரங்கள், மங்களவாத்தியம் முழங்க 60 அடி உயர கொடிமரத்தில் உற்சவ கொடியேற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வேளாக்குறிச்சி ஆதினகர்த்தர் ஸ்ரீலஸ்ரீ சத்தியஞானமகாதேவ தேசிகபரமாச்சாரிய சுவாமிகள் உட்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

திருச்சி மாவட்டம் தா.பேட்டை அடுத்துள்ள நா.கருப்பம்பட்டி கிராமத்தில் 150 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஸ்ரீசெல்வ விநாயகர், ஸ்ரீமகாமாரியம்மன் ஆலயத்தில், உலக நன்மை வேண்டி மகாயாகம், கஜபூஜை, நாகபூஜை நடைபெற்றது. இதில் பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00