நாகை மாவட்டத்தில் உள்ள 200 ஆண்டு கால பழமை வாய்ந்த ஸ்ரீகழுமலையம்மன் கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழா : பக்தர்கள் ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்

Feb 4 2016 7:45AM
எழுத்தின் அளவு: அ + அ -

நாகை மாவட்டம் சீர்காழியில் உள்ள 200 ஆண்டு கால பழமை வாய்ந்த ஸ்ரீகழுமலையம்மன் கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

சீர்காழியில் உள்ள 200 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஸ்ரீகழுமலையம்மன் ஆலயம், சமயக்குறவர் மூவரால் பாடப்பெற்ற புகழ்மிக்க ஸ்தலமாகும். இத்திருக்கோயில் புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, குடமுழுக்கு விழாவிற்கான யாகசாலை பூஜைகள் கடந்த மாதம் 31ஆம் தேதியன்று துவங்கி தொடர்ந்து நடைபெற்று வந்தது. வேதவிற்பனர்களால் ஆராதிக்கப்பட்ட புனித நீர் கலசங்கள் மேள தாளம் முழங்க நேற்று ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, தருமை ஆதின ஸ்ரீமத் திருஞானசம்பந்த தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் கோபுர கலசம் மற்றும் விமானங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு விழா விமர்சையாக நடைபெற்றது. தொடர்ந்து அம்பாளுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இந்த விழாவில் பங்கேற்ற பக்தர்கள் ஏராளமானோர், அம்பாளை தரிசனம் செய்தனர்.

திருச்சி மாவட்டம் நா.கருப்பம்பட்டி கிராமத்தில் 150 ஆண்டுகள் பழமைவாய்ந்த அருள்மிகு ஸ்ரீசெல்வவிநாயகர் மற்றும் ஸ்ரீமஹாமாரியம்மன் ஆலயத்தில் திருப்பணிகள் முடிவுற்றதையடுத்து, குடமுழுக்கு விழா நடைபெற்றது. கடந்த 31-ஆம் தேதி காவேரியிலிருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு யாகசாலையில் வைத்து ஆராதிக்கப்பட்டன. மேள தாளம் முழங்க நேற்று புனிதநீர் கலசங்கள் எடுத்துச் செல்லப்பட்டு கோபுர கலசங்களுக்கு ஊற்றப்பட்டு குடமுழுக்கு விழா நடைபெற்றது. இதில், பக்தர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனர். பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00