வெகு விமரிசையாக நடைபெற்ற மதுரை கள்ளழகர் கோயில் ஆடித்தேரோட்டம் : ஒரு கோடி ரூபாய் செலவில் புதிய தேரை உருவாக்க வழிவகை செய்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, பக்தர்கள் நெஞ்சார்ந்த நன்றி

Jul 31 2015 9:46AM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தின் தென்திருப்பதி என அழைக்கப்படும் மதுரை அழகர்கோயிலில் அமைந்துள்ள கள்ளழகர் கோயில் ஆடித்தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தேடம் வடம்பிடித்து இழுத்தனர். ஒரு கோடி ரூபாய் செலவில் புதிய தேரை உருவாக்க வழிவகை செய்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு, பக்தர்கள் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துக்கொண்டனர்.

கள்ளழகர் கோயில் ஆடித்திருவிழா கடந்த 22-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் சுந்தரராஜப் பெருமாளுடன், ஸ்ரீதேவி, பூதேவி எழுந்தருளினர். ஏராளமான பக்தர்கள் சரணகோஷங்களுடன் தேரை முக்கிய வீதிகள் வழியாக வடம்பிடித்து இழுத்துச் சென்றனர். 400 ஆண்டுகளாக இருந்துவந்த பழைய தேரை மாற்றி, ஒரு கோடி ரூபாய் செலவில் புதிய தேரை உருவாக்க வழிவகை செய்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு பக்தர்கள் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துக்கொண்டனர்.

64 சக்தி பீடங்களில் முதன்மையானதாக போற்றப்படும் திருவாரூர் கமலாம்பாள் அம்மனுக்கு ஆடி வெள்ளியையொட்டி சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. திரளான பக்தர்கள் இதில் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்.

ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் அமைந்துள்ள மாரியம்மன் கோவியில் ஆடி வெள்ளியையொட்டி நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

திருச்சி உறையூரில் அமைந்துள்ள வெக்காளியம்மன் ஆலயத்தில் ஆடி வெள்ளியையொட்டி அம்மனுக்கு முத்துக்கவசம் அணிவித்து, சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசித்து வருகின்றனர்.

அறுபடை வீடுகளில் 5-ம் படை வீடான திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆடிப் பெளர்ணமியையொட்டி, மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. திரளான பக்தர்கள் இதில் கலந்துகொண்டு முருகப்பெருமானை வழிபட்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00