ஸ்ரீசங்கரநாராயண சுவாமி, அம்மாளுக்கு காட்சியளிக்கும் ஆடித்தபசு நிகழ்ச்சி - பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

Jul 31 2015 6:56AM
எழுத்தின் அளவு: அ + அ -

நெல்லை மாவட்டம் சங்கரன் கோவிலில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீசங்கரநாராயண சுவாமி கோவிலில், சுவாமிஅம்பாளுக்கு காட்சியளிக்கும் ஆடித்தபசு நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

சைவ, வைணவ மதங்கள் இரண்டும் ஒன்றே என மக்களிடையே சமத்துவத்தை ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஆடிமாதம் உத்திராடம் நட்சத்திரத்தில் சுவாமி அம்மாளுக்கு காட்சியளிக்கும் ஆடித்தபசு விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான விழா கடந்த 20ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத்தொடர்ந்து அம்பாளுக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடத்தப்பட்டன. பின்னர் நடைபெற்ற தேரோட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியின்போது, அம்பாள் ஒற்றைக்காலில் நின்று தவம் செய்யும் கோலத்தில் தபசு மண்டபத்தில் எழுந்தருளினார். பின்னர் சுவாமி சங்கரநாராயணராக அம்பாளுக்கு காட்சி தந்தார். பின்னர் நள்ளிரவு 12 மணிக்கு மீண்டும் சுவாமி சங்கரநாராயணராக அம்பாளுக்கு காட்சி அளித்தார். தமிழக முழுவதிலும் இருந்து வந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இந்த அரிய காட்சியைக் கண்டு பரவசம் அடைந்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருவொற்றியூரில் உள்ள ஸ்ரீபட்டினத்தார் திருக்கோவிலில், பட்டினத்தார் குருபூஜையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன. முன்னதாக அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் திருமுறைகளை வைத்து, சிவனடியார்கள் பக்திப்பாடல்களை பாடியவாறு வீதிகளில் வலம் வந்தனர்.

இதேபோல், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பனிமயமாதா ஆலயத்தின, ஐந்தாம் நாள் திருவிழாவான நேற்று மாதாவுக்கு பொன்மகுடம் சூட்டும் சிறப்பு திருப்பலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான கிருஸ்தவ பெருமக்கள் கலந்து கொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00