பிரசித்திப் பெற்ற தூத்துக்குடி பனிமய மாதா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் - மத நல்லிணக்கத்தின் அடையாளமாக ஏராளமானோர் பங்கேற்பு

Jul 27 2015 12:31PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற கிறிஸ்தவ தேவாலயங்களில் ஒன்றான தூத்துக்குடி பனிமய மாதா ஆலய திருவிழா கொடியேற்றம் இன்று விமரிசையாக நடைபெற்றது. இதில் ஜாதி, மத, பேதங்களை கடந்து, ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

தமிழகத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் புகழ்பெற்றதும், ரோம் நகரின் பசலிக்கா அந்தஸ்துபெற்ற தேவாலயங்களில் ஒன்றாகவும் தூத்துக்குடி பனிமய மாதா ஆலயம் விளங்கி வருகிறது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் வெகு சிறப்பாக கொண்டாடப்படும் திருவிழா, இன்றுகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி மறைமாவட்ட ஆயர் இவான் அம்ப்ரூஸ் தலைமையில் கூட்டுத் திருப்பலி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஆலய கொடிப்பட்டம் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு, கொடி மரத்தில் ஏற்றப்பட்டது. இவ்விழாவில் அமைச்சர் திரு.எஸ்.பி.சண்முகநாதன், தூத்துக்குடி மேயர் திருமதி.அந்தோணி கிரேசி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் சாதி, மத, வேறுபாடின்றி கலந்து கொண்டனர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00