தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் நடைபெற்ற திருவிழா : ஏராளமான பத்கர்கள் கலந்துகொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்
May 30 2023 12:04PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் நடைபெற்ற திருவிழாக்களில் திரளான பத்கர்கள் கலந்துகொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஸ்ரீ நித்திய சுமங்கலி அம்மன் கோவிலில் தெப்பம் திருவிழா களைகட்டியது. பழைய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள ஸ்ரீ ராமர் நாயுடுகள் பஜனை மடம் சார்பில், வழக்கம் போல் மிகச் சிறப்பாக நடைபெற்ற தெரு பொங்கல் விழாவில், அம்மன் உருவம் பாதி அளவு தெரியும்படி தண்ணீர் ஊற்றி வழிபாடு நடத்தினர். இதன்போது, பம்பை இசைக்கு பெண்கள் உற்சாக நடமாடினர்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த சிலட்டூரில் முத்துமாரியம்மன் கோயிலில் ஆயிரக் கணக்கானோர் தேரை வடம்பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கு முன்னதாக முத்துமாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பல்லக்கில் எடுத்துச்சென்று தேரில் வைத்து இழுக்கப்பட்டது. செண்டை மேளம் முழங்க மேளதாளத்துடன் தேர் உற்சாகமாக வலம் வந்தது. தேரின் பின்னாலும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கும்பிடுதனம் செய்தனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே தேத்தாக்குடியில் உள்ள மங்கள மாரியம்மன் கோயிலில் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. மாவிளக்கு, அர்ச்சனை, காவடி, பால்குடம் என உள்ளிட்டவை உற்சாகமாக நடைபெற்றன.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அடுத்த கொத்தமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் திருவிழா, கோலாகலமாக நடைபெற்றது. பேச்சியம்மனின் தேரை பெண்கள், குழந்தைகள், மட்டுமே இழுக்க வேண்டியது பாரம்பரியம் என்பதால், அவர்கள் மட்டுமே தேர் இழுத்தனர். அப்போது இளைஞர்கள் தேருக்கு முன்பு ஆட்டம் போட்டனர். பாரம்பரிய முறைப்படி உறவுமுறையினர், மஞ்சள் நீர் ஊற்றி விளையாடினர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள குறிஞ்சி ஆண்டவருக்கு சிறப்பு மலர் வழிபாடு விழா நடைபெற்றது. வழிபாட்டில் முருகனுக்கு பல்வேறு வண்ணங்களில் உள்ள மலர்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது. இந்த மலர் வழிப்பாட்டில் ஏராளமான பக்தர்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பல வண்ணங்களில் முருகனுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது கண்கொள்ளா காட்சியாக இருந்தது.