வந்தவாசி அருகே சாலை பணியின் போது கிடைத்த மிகப்பெரிய சிவலிங்கம் : சிவ வாத்தியம் முழங்க, பக்தி பாடல்கள் பாடி சிவபெருமான வணங்கி வழிபட்ட பொதுமக்கள்

Mar 28 2023 2:56PM
எழுத்தின் அளவு: அ + அ -

வந்தவாசி அருகே சாலை பணியின் போது மிகப்பெரிய சிவலிங்கம் கிடைத்ததால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினர்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த மருதாடு கிராமம் அருகே சாலை விரிவாக்க பணி நடைபெற்று கொண்டிருந்தது.

அங்கிருந்த வேப்பமரத்தடியில் ஜே.சி.பி. மூலம் தோண்டிய போது டங் என சத்தம் கேட்க ஜே.சி.பி. ஓட்டுநர் அதிர்ச்சி அடைந்து தோண்டும் பணியை நிறுத்தினார்.

பின்னர் கடப்பாரையை கொண்டு அந்த இடத்தில் தோண்டிய போது நீண்ட உருவம் கொண்ட சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டது.

பிரம்ம சூத்திர குறியீடுடன் சிவலிங்கம் காணப்பட்டதால், ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய, மிகவும் பழமையான சிவலிங்கம் என ஆன்மீக பக்தர்கள் கூறுகின்றனர்.

8ஆம் நூற்றாண்டில் இந்த சிவலிங்கம் வடிவமைக்கப்பட்டிருக்கலாம் என தெரிவித்த கிராம மக்கள், கூட்டமாக கூடி சிவலிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகம் செய்து, வண்ணம் மலர்களால் சிவலிங்கத்தை அலங்கரித்து, பக்தி பாடல்களை பாடி வழிபட்டனர்.

ஒரு சில ஆன்மீக பக்தர்கள் சிவ வாத்தியம் முழங்க ஆனந்த வெள்ளத்தில் ஆடி மகிழ்ந்தனர். பின்னர் மகா தீபாராதனை காண்பித்து சிவபெருமானை வணங்கிய கிராம மக்கள் சுயம்புவாக கிடைத்த சிவலிங்கத்திற்கு கோவில் கட்டப் போவதாக தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00