ரத சப்தமியை முன்னிட்டு திருமலையில் குவிந்த ஆயிரக்‍கணக்‍கான பக்‍தர்கள் - ஒரே நாளில் மலையப்பசுவாமி ஏழு வெவ்வேறு வாகனங்களில் பக்‍தர்களுக்‍கு தரிசனம்

Jan 28 2023 1:32PM
எழுத்தின் அளவு: அ + அ -

ரத சப்தமியை முன்னிட்டு திருப்பதி திருமலையில் ஆயிரக்‍கணக்‍கான பக்‍தர்கள் குவிந்துள்ளனர். இலவச தரிசனத்திற்காக வைகுண்டம் காத்திருப்பு மண்டபத்திற்கு வெளியே 3 கிலோ மீட்டர் தொலைவு வரிசையில் பக்தர்கள் காத்திருக்‍கின்றனர். இன்று ரதசப்தமியை முன்னிட்டு காலை ஐந்து மணிக்கு துவங்கி இரவு 9 மணி வரை மலையப்பசுவாமி, சூரிய பிரபை, சந்திரபிரபை, கற்பகவிருட்சம் உள்ளிட்ட ஏழு வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி கோவில் மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். ஒரே நாளில் ஏழுமலையானின் ஏழு புறப்பாடுகளை தரிசிக்கும் வாய்ப்புள்ளதால், ஆயிரக்‍கணக்‍கான பக்‍தர்கள் திருமலையில் குவிந்துள்ளனர். இலவச தரிசனத்திற்காக பக்‍தர்கள் 36 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. பாதுகாப்புக்காக 700 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00