குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா கோலாகலத்துடன் நிறைவு - நள்ளிரவில் நடைபெற்ற சூரசம்ஹாரத்தில் லட்சக்‍கணக்‍கான பக்‍தர்கள் பங்கேற்பு

Oct 6 2022 12:25PM
எழுத்தின் அளவு: அ + அ -

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் தசரா திருவிழவின் முக்கிய நிகழ்ச்சியான மஹிஷா சூரசம்ஹாரம் கோவில் கடற்கரையில் கோலாகலமாக நடைபெற்றது. இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தசரா திருவிழாவை முன்னிட்டு, அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டதைதொடர்ந்து, அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரையில் உள்ள சிதம்பரரேஸ்வரர் கோவில் திடலில் எழுந்தருளினார். நள்ளிரவு 12 மணியளவில் அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேசுவரர் கோவிலுக்கு முன்பாக எழுந்தருளினார். அப்போது காளி வேடம் அணிந்த பக்தர்களும் அம்மனை பின்தொடர்ந்து வந்தனர். கடற்கரையில் அம்மன் மகிஷாசூரனை சூலாயுதத்தால் வதம் செய்தார்.

அப்போது கூடியிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர். பின்னர் கடற்கரை மேடையில் எழுந்தருளிய அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. மகிஷா சூரசம்ஹாரம் முடிந்ததும் அம்மனை வேண்டி பல்வேறு வேடமணிந்து விரதம் இருந்த பக்தர்கள், கடலில் புனித நீராடி சாமி தரிசனம் செய்து தங்கள் விரதத்தினை முடித்து கொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00