மதுரை அருகே வெயிலுகந்த அம்மன் கோயில் குடமுழுக்கு விழா : ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம்
Jul 6 2022 6:36PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரை அருகே உள்ள வெயிலுகந்த அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதியில் பழமை வாய்ந்த ஸ்ரீ வெயிலுகந்த அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்தகோயில் புனரமைக்கப்பட்டு குடமுழுக்கு விழா வெகு விமர்சியாக இன்று நடைபெற்றது. இதற்காக நான்கு நாட்களாக சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க யாகசாலை பூஜை நடைபெற்று. இததையடுத்து இன்று கோவில் கோபுரங்களுக்கு புனித நீர் ஊற்றி குடமுழுக்கு நடத்தப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். இதைதொடர்ந்து கோயில் நிர்வாகம் சார்பில் சுமார் 10 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.