உடுமலைப்பேட்டையில் அருள்மிகு மதுரை வீரன் கோவிலில் கும்பாபிசேகம் : ஏராளமான பக்‍தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்

Jul 6 2022 5:53PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருப்பூர் மாவட்டம் உடுமலைப் பேட்டையில் பிரசித்திபெற்ற அருள்மிகு மதுரை வீரன் கோவிலில் நடைபெற்ற கும்பாபிசேக விழாவில் ஏராளமான பக்‍தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப் பேட்டையில் 50 ஆண்டுகள் பழமையான அருள்மிகு ஸ்ரீ மதுரை வீரன், ஸ்ரீ பொம்மியம்மாள், வெள்ளையம்மாள் திருக்கோவில் உள்ளது. இத்திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழா விநாயகர் வழிபாட்டுடன் துவங்கியது. தொடர்ந்து முதல் கால பூஜை, அஷ்டபந்தன மருந்து சாத்துதல், கலசபூஜை, பூர்ணாஹீதி தீபாராதணை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இரண்டாம் கால யாக பூஜையில் நாடி சந்தானம், தீபாராதணையும் நடைபெற்றன. கோபுர கலசங்கள் ஆலயம் வலம் வந்த உடன் திருச்செந்தூர், சபரிமலை, கொடுமுடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் கோபுர கலசம் மீது ஊற்றபட்டு அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேகம் சிறப்பு வழிபாட்டுடன் நடைப்பெற்றது. இவ்விழாவில் ஏராளமான பக்‍தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00