சிதம்பரம் நடராஜர் திருக்கோவிலில் நடைபெற்ற ஆனி திருமஞ்சன விழா - ஆயிரக்‍கணக்‍கான பக்‍தர்கள் தேர் இழுத்து வழிபாடு

Jul 5 2022 12:22PM
எழுத்தின் அளவு: அ + அ -

கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் நடராஜர் திருக்கோவிலில் ஆனி திருமஞ்சன விழாவை முன்னிட்டு ஆயிரக்‍கணக்‍கான பக்‍தர்கள் திரண்டு வந்து வடம் பிடித்து தேர் இழுத்து வருகின்றனர்.

கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் உலகப் புகழ்பெற்ற நடராஜர் திருக்கோவில் உள்ளது. பூலோக கைலாயமாகவும், பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாய தலமாகவும் போற்றப்படுகிறது. ஆனித் திருமஞ்சன திருவிழா கடந்த மாதம் 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மிக முக்கிய திருவிழாக்களில் ஒன்றான ஆனி திருமஞ்சன திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று பக்‍தி முழக்‍கமிட்டபடி தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். தேரோட்டத்தில் நடராஜர், சிவகாமசுந்தரி, விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் ஆகிய 5 சாமிகளும் அலங்கரிக்கப்பட்ட தனித்தனி தேர்களில் வைத்து நான்கு மாட வீதிகளிலும் வலம் வருகின்றனர்.

தேர் நிலைக்கு வந்த உடன் நடராஜர், சிவகாமசுந்தரி சமேதராக ஆயிரங்கால் மண்டபத்தில் பக்‍தர்களுக்‍கு காட்சி அளிப்பார்கள். நாளை அதிகாலை மகா அபிஷேகம் நடைபெற உள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00